படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 47 Second

உறவின் போது நீடித்த இன்பம் எப்படி பெறுவது? நிறைய பேருக்கு இந்தக் சந்தேகத்துடன் கூடிய கவலை இருப்பது இயல்பான விஷயம் . படுக்கை அறையில் தம்மால் நீண்ட நேரம் இன்பத்தை துணைக்கு கொடுக்க முடியவில்லை, திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள்.உறவில் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பு சில தந்திரங்களை பயன்படுத்தினால் நீடித்த இன்பம் பெறுவது நிச்சயம். உங்க கிட்டேயே இருக்கும் இதற்கான வைத்தியத்தை இப்போ பார்ப்போமா…

ஸ்டாப்…ஸ்டார்ட்…

இது ஒரு வகையான தந்திரம். உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் போது விந்தணு வெளியேறப் போவது போல தோன்றும்போது, உங்களது ஆணுறுப்பை வெளியே(ஸ்டாப்)எடுத்து விடுங்கள். 10 முதல் 15 விநாடிகள் ரெஸ்ட் விடுங்கள். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள்(ஸ்டார்ட்). இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போலவும் இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.

உணர்வை கட்டுப்படுத்தும் டெக்னிக்

கிளைமேக்சின் போது பொங்கி எழும் உணர்வை கட்டுப்படுத்தும் இந்த டெக்னிக்கை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பிறகு ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு கட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்று தடுத்து நிறுத்த இந்த டெக்னிக் உதவும். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவை ஆர்வமுடன் தொடருங்கள்,

உபயோகியுங்கள் உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை

இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படும் ஆணுறை. இந்த வகை ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. இப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பு: இப்படிப்பட்ட ஆணுறைகளை தலைகீழாக அணிந்துவிட்டீர்களானால், எல்லாமே தலைகீழ்தான்..அதாவது நீடித்த இன்பத்திற்குப் பதில், குறுகிய கால இன்பமாகி விடும்… ஜாக்கிரதை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மகப்பேற்றுக்கு பின் உடற்பயிற்சிகள்!! (மருத்துவம்)