எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா..? (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 38 Second

புவியியல், கலாச்சாரம், வரலாறு, அரசியல் அமைப்பு, பொருளாதாரம், மக்கள் தொகை என நாடுகளிடையே வேற்றுமைகள் பலவாறு இருந்தாலும் இவை எதுவுமே நம் கண்களுக்குத் தெரிவதில்லைதான். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 20 வயதே நிறைந்த இளம் டிஜிட்டல் கிரியேட்டர் கிரிப்டோ டீ. கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை விரல் நுனியில் கொண்டு வந்து இணைய பக்கங்களில் புகுந்து விளையாடுகிறார்.

மிகச் சமீபத்தில் இவர் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்களின் உடை, அணிகலன்கள், அவர்களின் மேனரிசம் என புகைப்படங்களாக்கி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். இவரின் இந்தப் புகைப்படங்கள் 2.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து, 14.3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளி கடந்த வாரத்தின் பேசுபொருளாக மாறியது.இனி இளைஞர்கள் எல்லாம் AI தொழில்நுட்பத்திடம் சென்று எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா என லைன் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீர் வரிசைத் தட்டில் 500 வெரைட்டி இருக்கு!! (மகளிர் பக்கம்)
Next post ங போல் வளை!! (மருத்துவம்)