சரியான உள்ளாடை அளவை எப்படி கண்டுபிடிப்பது? (மருத்துவம்)

Read Time:8 Minute, 13 Second

பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக உடை உடுத்தினாலும் சரியான அளவில் உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணியவில்லை எனில் நமது தோற்றம் நேர்த்தியாக இருக்காது. பொருத்தமில்லாத உள்ளாடைகளை தொடர்ந்து அணிவதால் மார்பகம் நாளடைவில் தொய்வடையும். உள்ளாடைகள் சரியான அளவில் ஃபிட்டாகவும், உடைக்கு ஏற்பவும் இருக்க வேண்டியது அவசியம்.
சரியான அளவினைத் தேர்ந்தெடுக்க நமக்கு தெரிந்திருக்க வேண்டியது ‘பேன்ட் சைஸ்’(Band Size) மற்றும் ‘கப் சைஸ்’ (CUP Size). பேன்ட் சைஸ் சென்டி மீட்டர் மற்றும் இன்ஞ்சில் குறிப்பிடப்பட்டிருக்கும். கப் சைஸ் ஆங்கில எழுத்தான A, B, C, D என இடம் பெற்றிருக்கும். இந்த இரண்டின் சரியான அளவும் தெரிந்துவிட்டாலே நம்முடைய சரியான உள்ளாடை எது என்பதை தேர்ந்தெடுக்கலாம்.

இதற்குத் தேவை ஒரு இஞ்ச் டேப் மற்றும் சிப்பிள் கால்குலேஷன் மட்டுமே.

முதலாவது பேன்ட் சைஸ்

இஞ்ச் டேப் உதவியோடு முதலில் பேன்ட் சைஸ் அளவை கணக்கிட வேண்டும். பேன்ட் சைஸ் என்பது நமது ரிப்கேஜ் (ribcage) அளவு. அதாவது மார்பகத்தின் அடிப்பகுதி (Under brust) சுற்றளவாகும். மார்பகத்தின் அடிப்பகுதியில் உள்ள ரிப்கேஜ் சுற்றளவை இஞ்ச் டேப்பால் சுற்றி அளவெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு மார்பகத்தின் அடிப்பகுதி சுற்றளவு 38 என இஞ்சில் இருந்தால், 38 உடன் 5 இலக்கத்தைக் கூட்ட வேண்டும். 38 + 5 = 43. இது ஒற்றைப்படை (odd number) எண். உள்ளாடையின் அளவு எப்போதும் 34, 36, 38, 40 என இரட்டைப் படை இலக்கத்தில்தான் (even number) கிடைக்கும். கூட்டு இலக்கம் ஒற்றைப்படை எண்ணாக வந்தால், அடுத்த எண் 44க்கு நாமாக நம்முடைய அளவை இரட்டை இலக்க எண்ணிற்கு மாற்ற வேண்டும்.

இரண்டாவது கப் சைஸ்

பேன்ட் சைஸூடன், மார்பகச் சுற்றளவைக் கழித்தால் வரும் அளவே நம்முடைய கப் சைஸ். கப் சைஸ் A, B, C, D என ஆங்கில எழுத்தில் (alphapets) இடம்பெற்றிருக்கும். இதில் A என்பது 1, B என்பது 2, C என்பது 3, D என்பது 4. கப் சைஸ் அளவைக் கணக்கிட மார்பகச் சுற்றளவை இன்ஞ் டேப்பில் எடுக்க வேண்டும்.

உதாரணத்துக்கு மார்பகச் சுற்றளவு 40 என்றால் அந்த 40ஐ ஏற்கனவே எடுத்த பேன்ட் சைஸ் சுற்றளவான 44ல் இருந்து கழிக்க வேண்டும். 44 – 40 = 4. இதில் 4 என்பது ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ள D ஆங்கில எழுத்தை குறிக்கும். உங்களுடைய உள்ளாடை D கப்பை சேர்ந்தது. நீங்கள் உள்ளாடை வாங்க கடைக்குச் செல்லும்போது 44” D கப் எனக் கேட்டு வாங்க ேவண்டும். உடல்வாகைப் பொறுத்து உள்ளாடையின் கப் சைஸ் மாறும்.

மேலே காட்டிய வழியில் சரியான அளவைக் கணக்கிட்டு, நமக்கேற்ற உள்ளாடைகளை விற்பனையாளர்களிடம் கேட்டு வாங்கி அணிவதே எப்போதும் சிறந்தது. முடிந்தால் டிரையல் செய்து பார்த்துவிட்டும் வாங்கினால் இன்னும் கூடுதல் சிறப்பு.இனி எந்தெந்த உடைக்கு எந்தெந்த மாதிரியான உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் என்பதையும் பார்ப்போம்.

ஸ்போர்ட்ஸ் பிரா (Sports Bra)

யோகா, உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற உடல் அசைவுகள் கொண்ட பயிற்சிக்கு இதனை அணியும்போது அசௌகரியம், மார்பகப் பகுதியில் வலி போன்றவை ஏற்படாது.

பேடெட் பிரா (Padded Bra)

மார்பகம் சிறிதாக இருந்தால் பெரிதாகக் காட்டுவதுடன், டைட் பிட்டிங் உடைகள், டி ஷர்ட்ஸ் அணியும்போது இதனை அணியலாம்.

ஃபிரென்ட் கிராஸ் பெல்ட் பிரா (Front Cross belt Bra)

முன்பக்கத்தின் நடுவில் X வடிவில் எலாஸ்டிக் சப்போர்ட் இருப்பதுடன், கப்பின் நடுவில் ஒரு ஸ்டிச் லைன் இடம் பெரும். இந்தவகை உள்ளாடையின் கப் மார்புப் பகுதியில் கச்சிதமாக இருக்கும். சேலை உடுத்த பிளவுஸ் அணியும்போது இது பக்காவாக செட்டாகும்.

ஃபிரென்ட் ஹுக் பிரா(Front Hook Bra)

பின் பகுதியில் ஹுக் போட முடியாதவர்களும், வயதானவர்களுக்கும் அணிய சுலபமானது.

டி ஷர்ட் பிரா(Tea shirt Bra)

இதில் ஸ்டிச் லைன் மார்பகத்திற்கு நடுவில் இருக்காது. மார்பகம் முழுமையாக மூடப்பட்டு இருக்கும். லைட் பிட்டிங் சல்வார் கம்மீஸ், குர்த்திஸ் அணியும்போதும் பயன்படுத்தலாம்.

புஷ் அப் பிரா (Pushup Bra)

இது பேடெட் டைப். கப்பில் ஸ்லான்டிங் ஆங்கிளில் கட் செய்திருப்பார்கள். இதில் ஃபுல் கவரேஜ் இருக்காது. வெஸ்டெர்ன் பார்ட்டி வேர் உடைகளுக்கு அணிய ஏற்றது.

அப்லிஃப்ட் பிரா (Uplift Bra)

தொய்வான மார்பகம் உள்ளவர்கள் மார்பகத்தை உயர்த்தி ஸ்டிப்பான வடிவத்தில் வைத்திருக்க உதவும். குண்டாக இருப்பவர்கள், மார்பகம் பெரிய வடிவில் உள்ளவர்களுக்கு சரியான தேர்விது. சல்வார் கம்மீஸ், குர்த்தீஸ், டி ஷர்ட், ப்ளவுஸ் என அனைத்து உடைக்கும் பொருந்தும்.

மல்டிவே பிரா (Multiway Bra)

ஒரே பிராவில் பலவிதமான ஸ்டைலிங் செய்ய முடியும். இதில் ஸ்ட்ராஃப் ரிமூவபிள் டைப்பில் இருக்கும்.

நர்ஸிங் பிரா அல்லது ஃபீடிங் பிரா (Nursing Bra)

பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்துவதற்கான பிரா.

ப்ளன்ஞ் புஸ்அப் பிரா (Plunge Pushup Bra)

லோ நெக் உடைகளுக்கு அணியப் பொருத்தமானது. இரண்டு மார்பகத்தையும் நடுப்பகுதியில் இணைத்து சப்போர்ட் செய்வதுடன், பேடெட் டைப்பில் வரும்.

பால்கநெட் பிரா (Balconette Bra)

தோள்பட்டை அகலமானவர்கள், மார்பகம் ஸ்டிப்பாக இருப்பவர்களுக்கு அணிவதற்கு ஏற்றது. கப் ஃபுஸ் அப் மாடலில் மார்பகத்தின் நடுப் பக்கத்தை அதிகப்படுத்திக் காட்டும்.

ஸ்ட்ராப்லெஸ் பிரா (Strapless Bra)

தோள்பட்டை தெரியகிற மாதிரி (Half shoulder dress) உடை அணிபவர்களுக்கு ஏற்றது.

அண்டர்வயர் பிரா (UnderWire Bra)

கப்பில் அரை வட்டத்தில் ஸ்டிப்பான மெட்டீரியல் வைக்கப்பட்டிருக்கும். இது மார்பகத்தை எடுத்துக் காட்டுவதுடன், அனைத்து வகையான பேப்ரிக் மெட்டீரியலிலும் கிடைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எலும்புகளை உறுதியாக்கும் மரவள்ளிக்கிழங்கு!! (மருத்துவம்)
Next post தேவை தேனிலவு!! (அவ்வப்போது கிளாமர்)