பால் + கலந்து களிப்போம்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 31 Second

பால் அனைத்து வயதினரும் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுப் பொருள். ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான கால்சியம், புரோட்டீன், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து, ரிபோஃப்ளேவின, பொட்டாசியம், பாஸ்பரஸ், அயோடின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்றவை அதிகளவில் உள்ளன. பாலை தினமும் உட்கொண்டு வந்தால், பற்கள், எலும்புகள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அதுவும் வளரும் குழந்தைகள் பாலை குடித்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதே போல் வயது அதிகரிக்கும்போது பாலைக் குடிப்பதால், அது முதுமைக் காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைத்து, எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளும்.
இது தவிர, பால் மூளையின் வளர்ச்சிக்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆனால், பாலை வெறுமனே குடிக்காமல், பாலுடன் எந்த பொருட்களை கலந்து குடித்தால், இருமடங்கு பலனைப் பெறலாம் என்பதைக் தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவ குணம் வாய்ந்த மஞ்சள்தூளை பாலுடன் சேர்த்தால், பால் சுவையாக இருப்பதோடு, உடலுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கும். அதுவும் இரவு நேரத்தில் மஞ்சள்தூள் கலந்த பாலைக் குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும். சளி, இருமல் இருந்தாலும் சரியாகும். உலர் பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் இருமடங்கு நன்மை கிடைக்கும். பாதாம், முந்திரி, உலர் திராட்சை, வால்நட் போன்றவற்றை பொடித்து பாலுடன் சேர்த்து இரவு தூங்கும் முன் குடித்து வந்தால், நல்ல தூக்கத்தைப் பெறுவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துகள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பாலுடன் பழங்களை சேர்த்து மில்க்‌ஷேக்காக அடித்து உட்கொண்டால், சுவையாக இருப்பதோடு, உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கும். முக்கியமாக வாழைப்பழம் கலந்த பாலானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தற்போது கடைகளில் ரோஸ், ஸ்ட்ராபெர்ரி, பட்டர்ஸ்காட்ச் போன்ற ப்ளேவர்டு பால் பவுடர்கள் விற்கப்படுகின்றன. இவை மிகவும் சுவையாக இருப்பதோடு, இவற்றில், டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை இருப்பதால் செரிமான மண்டலம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும் மேம்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கதை கேளுங்க… கதை கேளுங்க…! (மகளிர் பக்கம்)
Next post வானவில் உணவுகள்!! (மருத்துவம்)