லிச்சி பழத்தின் நன்மைகள்! (மருத்துவம்)
கோடை கால சீசன் பழங்களில் சுவையானதும் ஆரோக்கியமானதும் லிச்சிப்பழமாகும். சத்துக்கள் நிறைந்த லிச்சிப்பழத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்:
லிச்சி அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். வைட்டமின் சி, கே, பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது. கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகளும் இதில் காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தி ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே ரத்தசோகையை போக்க உதவி செய்யும்.
சருமத்தை அழகாக்கும் சக்தி லிச்சிக்கு உண்டு. மேலும் கோடை காலத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலுக்கும் லிச்சி சிறந்த மருந்தாகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் பழங்களின் பட்டியலில் லிச்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது. உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சோர்வில் இருந்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. ஈ.கோலி நோய்த்தொற்றுகள் போன்ற பல கோடை நோய்களுக்கு சிகிச்சையளிக்க லிச்சி பழச்சாறு உதவுகிறது. இது நமது சரும பராமரிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதே மாதிரி பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோயை தடுக்க லிச்சிபழம் உதவுகிறது.
லிச்சி சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது, இது தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது.லிச்சியில் மிகக் குறைவான கலோரிகள் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க மிகவும் பயன்படுகிறது. இந்த பழத்தில் பொட்டாசியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால் லிச்சி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
லிச்சி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால், பல வகையான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. செரிமான அமைப்பை மேம்படுத்தி, வயிற்று பிரச்னைகளை ஏற்படுத்தாத பல ஊட்டச்சத்துக்கள் லிச்சியில் உள்ளது.லிச்சியில் 80 சதவீதம் நீர்ச்சத்து இருப்பதால், சருமத்தை கோடையில் நீரேற்றமாக வைக்க உதவுகிறது.