பூண்டின் பயன்கள்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 24 Second

பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பல வகையில் நமக்குப் பயன்தருகிறது. உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற பயன்கள் உள்ளன.பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகளும் இருக்கின்றன. பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட நிறைய நன்மைகளைத் தருகிறது.

பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்கும் நல்ல பலன் தருகிறது. பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.

பாலில் பூண்டை வேகவைத்து அதை அருந்திவர தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.சளியை கரைத்து, சுவாசத் தடையை நீக்கும். ஜீரணசக்தியை அதிகரிக்கும்.பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வர, கல்லீரல், சிறுநீர்ப்பை சரியாக செயல்படும். வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது. வாயுவை அகற்றி, அஜீரணத்தை குறைத்து. பசியின்மையைப் போக்கும்.இதய அடைப்பை நீக்கும். நீரிழிவு நோயாளிகளின் ரத்த அளவைக் குறைக்கிறது.

பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல் குழாயில் உள்ள கெட்டி சளியை இளக்கி வெளியேற்றும். தொண்டைச் சதையை நீக்கும்.5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும். மேலும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.

10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி, மூட்டுவலி ஆகியவை குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ங போல் வளை-யோகம் அறிவோம்! (மருத்துவம்)
Next post வேதனையை விலைக்கு வாங்கலாம்! (அவ்வப்போது கிளாமர்)