கோபத்தை கட்டுப்படுத்த எளிய வழிகள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 26 Second

அவசியமான விஷயத்துக்கு கோபம் வருவது இயற்கை. ஆனால் தொட்டதுக்கெல்லாம் கோபம் வருவதும் அதிக நேரம் அதிலேயே மூழ்கி இருப்பதும் மனத்தளவிலும் உடலிலும் மோசமான பாதிப்பை உண்டு பண்ணும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற உடல் உணர்ச்சி ரீதியான எதிர்விளைவுகளுக்கும் வழிவகுக்கலாம். எனவே, அடிக்கடி கோபப்படுபவர்களாக இருந்தால், கோபத்தை கட்டுப்படுத்துவது மிகமிக அவசியமானது. கோபத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வழிகள் சிலவற்றை பார்ப்போம்:

கோபம் அதிகமாக இருக்கும்போது, ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும். அதனால், இருக்கும் இடத்தில் இருந்து எழுந்து வெளியே சென்று சிறிது நேரம் நடந்துவிட்டு வரலாம்.

கோபப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அல்லது எந்த நிகழ்வாக இருந்தாலும் அதைப்பற்றி சிந்திப்பதை சில மணி நேரம் தள்ளிப்போடுங்கள். இது பெரிய விரிசலை உண்டு பண்ணாது என்பதோடு தவறுகளை திருத்திக்கொள்ளவும் உதவும். கோபம் வரும்போது ஏற்படும் பதற்றத்துடன் கூடிய சுவாசம் இன்னும் ஆக்ரோஷமாக காட்டும். மேலும், சீரற்ற சுவாசத்தினால் இதயம் பலவீனமாகலாம்.

எனவே, மூச்சை சில நிமிடங்கள் உள்ளிழுத்து மெதுவாக வெளியேவிட்டு சுவாசத்தை கட்டுப்படுத்தலாம். இதனால், கோபம் தணிவதோடு, மனதும் அமைதியாகும்.
​எல்லாம் சரியாகிவிடும், ஆல் இஸ் வெல் போன்ற மனதை அமைதிப்படுத்தும் வார்த்தைகளை திரும்பத் திரும்ப தனக்குத்தானே சொல்லிக்கொள்வது கோபம் விரக்தி போன்ற கடினமான உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

கோபத்தில் வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் அமைதி காப்பது மிகவும் நல்லது. ஏனென்னறால், கோபத்தில் கண்ட்ரோல் இல்லாமல் வெடித்து விழும் வார்த்தைகள் நெருக்கமானவர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ காயப்படுத்திவிடும். பின்னர், கோபம் தணிந்து வருத்தப்படுவதை விட, மெளனமாக இருப்பது பல பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடும்.

​கோபஉணர்வு அதிகமாக இருக்கும்போது, கொதிக்கும் மனநிலையில் உடலையும் மூளையையும் அமைதிப்படுத்த கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். மென்மையான இசை கேட்பது, படம் வரைவது, குழந்தைகளுடன் விளையாடுவது, மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஈடுபடுவது போன்றவை மனதை அமைதிப்படுத்த உதவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நகங்கள் பளபளக்க…!! (மகளிர் பக்கம்)
Next post கண் சோர்வு… தீர்வு என்ன? (மருத்துவம்)