ஹேர் டை கவனிக்க வேண்டியவை! (மருத்துவம்)

Read Time:4 Minute, 11 Second

முன்பெல்லாம்முதுமை பருவத்தில்தான் தலைமுடி நரைக்கதொடங்கும். ஆனால், சமீபகாலமாக,நமது உணவு பழக்கவழக்கங்களாலும், லைஃப் ஸ்டைல்மாற்றத்தாலும், இளம் வயதிலேயே பலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இதனால்,பலரும் ஹேர் டையை இளம் வயதிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால், ஹேர் டையை பொருத்தவரை, பெரிய ஆபத்துக்களை விளைவிப்பதில்லை என்றாலும் செயற்கையான முறையில் கெமிக்கல் கலந்து தயாரிக்கப்பட்டஹேர் டைகளை பயன்படுத்துவது ஆபத்தே என்கின்றனர் மருத்துவர்கள்.

பொதுவாக, விலையுயர்ந்த டையைதான் பயன்படுத்துகிறேன், இருந்தாலும்எனக்கு அது நிற்பதே இல்லை… சட்டெனமுடி வெளுத்துப்போகிறது என்று அடிக்கடிடையை பயன்படுத்து வதைமுடிந்தவரை தவிர்ப்பது நல்லது.ஏனென்றால்,கெமிக்கல் கலந்தடையோ அல்லதுஇயற்கையானதோ எந்த வகை டையிலும் நச்சுத்தன்மை இருக்கவே செய்யும்.எனவே, மாதத்துக்கு ஒருமுறை டையை உபயோகிப்பதே நல்லது.அது அந்தளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதுபோன்று, டை உபயோகிக்கும்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.ஏனென்றால்,அதிகநேரம் ஹேர்டை தலையில்ஊறுவது நாளடைவில்கண் பிரச்னைகள்,சருமப் பிர்சனைகள் போன்றவற்றை உருவாக்கும். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் தலையை அலசிவிட வேண்டும். மேலும், தலைக்குக் குளிக்கும்போது வாயையும் கண்களையும் மூடிக்கொண்டு அலசவும்.

அதுபோன்று டையை தடவிக்கொண்டு காத்திருக்கும் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.ஏனென்றால்,டையினால் உடலில் சேரும் நச்சுகள் சிறுநீர் கழிக்கும்போது வெளியேறிவிடும்.நம்முடைய சருமமானது சீபம் என்ற எண்ணெயைச் சுரக்கும். சருமத்தின் உள்ளே உள்ள செபேஷியஸ் சுரப்பியின் வழியே சுரக்கும் அந்த எண்ணெயானது வெளியே கசியும். அது முடியின் வேர்க்கால்களிலும் படியும்.

அதனால்தான் தலைக்குக் குளித்த இரண்டாவது நாளே தலைமுடி பிசுபிசுப்பாக மாறும். தலைமுடியில் எண்ணெய் தடவியதுபோலவே இருக்கும். இந்த எண்ணெய்ப் பசையானது அதிகளவில் சுரப்பவர்களுக்கே, டை போட்டாலும், விரைவில் தலைமுடி வெளுத்துவிடுகிறது. எனவே,சீக்கிரம் நரைத்தாலும் மறுபடி ரீடைச் செய்துகொள்வதில் தவறில்லை.

இருந்தாலும், இந்த பாக்கெட் ஹேர் டைகளில் அமோனியா மற்றும் பாராபெனிலெனிடமைன் (PPD ) என்னும் இரு வகையான ஆபத்து நிறைந்த கெமிக்கலை பயன்படுத்துகின்றனர். எனவே ஹேர் டை வாங்கும் முன் இந்த இரண்டு கெமிக்கல்களும் இருக்கிறதா என பார்த்து வாங்குவது நல்லது.அல்லது கடைகளில் வாங்கும் கெமிக்கல் நிறைந்த ஹேர் டைகளை பயன்படுத்துவதை முடிந்தளவு குறைத்துக்கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் டைகளைபயன்படுத்துவது நலம் தரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பவர் லிஃப்டிங் மூலம் என் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!! (மகளிர் பக்கம்)
Next post குருதியுறையாமை அறிவோம்! (மருத்துவம்)