ஆரோக்கியம் காக்கும் சதகுப்பை!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 16 Second

சதகுப்பை குறுஞ்செடியாக பயிரிடப்படுகிறது. இதன் விதைகள் பழுத்ததும் தனியாக பிரிக்கப்படும். இதனுடைய இலைகள் இனிப்பும், கார்ப்பும் கலந்த சுவையை கொண்டிருக்கும். இந்த இலைகள் கீரைவகையை சார்ந்தது. இதை சமைத்து சாப்பிடலாம். இதன் விதைகள் கொத்துமல்லி விதைகள் போன்று இருக்கும். இந்த விதைகளை உலர்த்தி பொடியாக்கினால் அதுவே சதகுப்பை என்றழைக்கப்படுகிறது. சதகுப்பை நாட்டுமருந்துக் கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்தான்.

*சீரற்ற மாதவிடாய் பிரச்னையில் இருப்பவர்கள் சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் மூன்றையும் சமஅளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதை பனை வெல்லத்துடன் கலந்து உருண்டை செய்து தினமும் காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சி சீராகும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக வலி குறையும். கருப்பை பலம் பெறும்.

*அரை தேக்கரண்டி சதகுப்பைப் பொடியுடன் அரை தேக்கரண்டி அமுக்கரா சூரணம் கலந்து அதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் கருப்பை அழுக்குகள் வெளியேறும்.

*கர்ப்பப்பைக் கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும்.

*ரத்த அழுத்தநோய் குறைய கருங்காலிப்பட்டை, சதகுப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து சுண்டவைத்து சாப்பிட ரத்த அழுத்த நோய் குறையும்.

*ரத்தசோகை குறைய சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாறில் கலந்து குடித்துவந்தால் ரத்த சோகை குறையும். மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் இதை குடித்து வந்தால் இரத்தம் விருத்தியடையும். உடல் பலம் பெறும்.

*சதகுப்பை இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும். மிளகு, சுக்கு, சதகுப்பை, ஏல அரிசி, தேன் அனைத்தையும் இடித்து வடிகட்டிவடிகட்டிய தூளை தேன் சேர்த்து சாப்பிட்டால் முறையாக பசி ஏற்படும்.

*ரோஜாப்பூ மொட்டு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை இடித்து சுடுநீரில் போட்டு மூடி வைத்திருந்து வடிகட்டி கொடுத்துவர வயிற்றுவலி குறையும். சதகுப்பை இலைகளை சமைத்து சாப்பிட்டு
வந்தால் வாத நோய்கள் குறையும்.

* சதகுப்பை இரைப்பை மற்றும் நுரையீரலை சுத்தம் செய்யும் குணங்களை கொண்டது. சைனஸ், தலைவலி, மண்டையில் நீர்க் கோர்வை, காதுமந்தம் உள்ள வர்களும் சரியான முறையில் சதகுப்பை இலை மற்றும் சதகுப்பை விதைகளை பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும்.

*இந்த இலையை காயவைத்து சருகாக்கி வீட்டினுள் புகை போட்டு வைத்தாலும் அந்த புகையை சுவாசிக்கும் போது நுரையீரலில் இருக்கும் மாசை வெளியேற்றும். மூக்கில்நீர் பாய்தலை கட்டுப்படுத்தும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post தாய்ப்பால் எனும் ஜீவாமிர்தம்! (மருத்துவம்)