காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 57 Second

ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே, பருவகால மாற்றத்தால், காற்று மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உண்டு. இது பொதுவாக சீசனல் நோய்களாக பார்க்கப்படுகிறது. அதாவது, சளி காய்ச்சல், தட்டம்மை, சின்னம்மை, புட்டாளம்மை, காசநோய், இன்புளுயன்சா, நிமோனியா, தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு காற்று மூலம் பரவுகின்றன. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளே இந்த தொற்று நோய்கள் பரவ முக்கிய காரணமாகும்.

இவை காற்று, நீர், ரத்தம் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகின்றன. மேலும், இந்த நோய்வாய்ப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும்போதும் அருகில் இருப்பவர்களுக்கும் பரவுகிறது. இதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். அப்போதுதான், இதுபோன்ற காற்றில் எளிதில் பரவும் நோய்களை தவிர்க்க முடியும். அந்தவகையில், சில தொற்று நோய்கள் குறித்தும் அதன் தடுப்பு முறைகள் குறித்தும் அறிந்து கொள்வோம்:

சின்னம்மை (Vericella) (Zoster)

காற்றில் பரவும் தொற்று நோய்களில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது சின்னம்மை. இது தீவிரமாக, அதிகப்படியாக தொற்றக்கூடிய ஒரு நோய், இது வெரிசெல்லா சோஸ்டர் வைரஸ் மூலம் பரவுகிறது. நோய் தொற்று ஏற்பட்ட 14 – 16 நாட்களில், சில சயமங்களில் 10 – 21 நாட்களில் இந்த நோய் தீவிரமடையும்.

அறிகுறிகள்: நோய் முற்றிய நிலையில் மிதமான காய்ச்சல், வலி, நீர்க்கட்டு மற்றும் சில்லிட்டுப் போதல் ஏற்படும்.

இராப்டிவ் நிலை: குழந்தைகளுக்கு கொப்பளங்கள் தென்படும், அதோடு காய்ச்சல் இருக்கும். கொப்பளங்கள் கழுத்துப் பகுதியிலும், அதனைத் தொடர்ந்து முகம், கை, கால்களில் காணப்படும். மிக விரைவில் கொப்பளங்கள் வளர்ச்சி அடைந்துவிடும்.தடுப்பு நடவடிக்கைகள்: கொப்பளங்கள் தோன்றிய 6 நாட்களுக்கு தனித்து வைக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அவ்வப்போது அப்புறப்படுத்திவிட வேண்டும். மூக்கில், தொண்டையில் காணப்படும் ஒழுக்குகளை தொற்று நீக்கம் செய்தல் வேண்டும்.

நோய்தொற்று ஏற்பட்ட 72 மணி நேரத்தில் வெரிசெல்லா சாஸ்டர் இமினோகுளோபின் தடுப்பு மருந்து கொடுத்தால் தடுக்க முடியும், மருத்துவரை அணுகி அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தட்டம்மை

ரூபியோலா குழந்தைகளிடையே தீவிரமாகவும், அதிகமாகவும் பரவும் நோய்த்தொற்றாகும். இது ஒரு வகை மிக்சொ வைரஸினால் பரவக் கூடும்.இந்த தட்டம்மை மூன்று நிலைகளாக பரிக்கப்படுகிறது. அவை, புரோட்ரோமல் படிவம், இரட்டிவ் படிவம் , தட்டம்மை ஏற்பட்டபின் படிவம்.

புரோட்ரோமல் நிலை: நோய்த்தொற்று 10 நாட்களில் இருந்து தொடங்கி 14 நாட்கள் வரை நீடிக்கும். நீர்க்கட்டு, தும்மல், மூக்கில் ஒழுக்கு, இருமல், கண்கள் சிவந்து காணப்படுதல். கண்களிலிருந்து நீர்க்கசிவு, பார்வை குறைபாடு வாந்தி, பேதி (அ) இரண்டு தினங்களில் கொப்புளங்களில் புள்ளிகள் தெரிய ஆரம்பித்தல் கன்னங்களின் உட்புறம் தென்படும். நுண்ணிய நீலம் கலந்த வெண்புள்ளிகள் முகத்திலும், நெற்றியிலும் கொப்புளங்கள் முழு உடம்புக்கும் பரவுகின்றன.

இரேட்டிவ் நிலை: கொப்பளங்கள் மிகவும் அதிகமான வகையில் காதுக்கு பின்புறம் பரவி, சில மணி நேரம் நீடித்து கொப்பளங்கள் முகம் மற்றும் கழுத்து மற்றும் உடல் முழுவதும் மற்றும் 2 to 3 நாட்களுக்கு பின் கை, கால்களில் தென்படும்.

தட்டம்மை ஏற்பட்டபின் நிலை: தட்டம்மையானது குழந்தைகளுக்கு எடை குறைவாக இருக்கும் போதும் மற்றும் பலவீனமாக இருக்கும் போதும் பல நாட்கள் நீடிக்கும். குணமடையக் கூடிய வாய்ப்புகள் மிக மிகக் குறைவு மற்றும் நாட்பட்ட நிலையில் இருக்கும் போது நோய்க்காலம் பாதிப்பு ஏற்பட்டு, மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாகவும் கூட, வைரஸினால் ஊட்டச்சத்து நிலை, மெட்டபாலிக் நிலை, திசுக்களின் கழிவு நிலை இருக்கக் கூடும். மேலும் வளர்ச்சி குறைவு மற்றும் பேதி, கான்கிரம் ஒரிஸ், பையோஜெனிக் நோய்த் தொற்று, கான்டிடியாசிஸ் மற்றும் நுரையீரல் காசநோய் பாதிப்பு இருக்கக் கூடும்.

பேதி, நிமோனியா (சுவாச சம்பந்தப்பட்ட சிக்கல்கள்), நடுச்செவியில் நோய்த்தொற்று ஏற்படும். மற்றும் நரம்பு சம்பந்தபட்ட சிக்கல்கள் வலிப்பு, மூளையில் நோய்த்தொற்று போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. தடுப்பு நடவடிக்கை: நோய்த் தொற்று ஏற்பட்டவர்களை 7 நாட்களுக்கு தனித்து வைத்தல் அவசியமாகும்.தொற்று ஏற்பட்ட 2 நாட்களுக்குள் நோய்த் தடுப்பு தரவேண்டும். அதாவது, தடுப்பூசி தரமுடியாத நிலையல் 3-4 நாட்களுக்குள் இமினோகுளோபிலின் தர வேண்டும்.

புட்டாளம்மை

புட்டாளம்மை என்பது தீவிர நோய்த்தொற்று உள்ள நோய், இது வைரஸ் நோய்த்தொற்று, பொதுவாக குளிர்க்காலத்தில் பரவக் கூடும். RNA வைரஸ் ஜீனஸ் ரூபெல்லா
வைரஸால் பரவக்கூடியது. இது பேராமிக்சோவைரிடே குடும்பத்தை சார்ந்தது. இது தொற்றுள்ள நபர் மூலம் பரவக்கூடியது. 2-3 வாரத்தில் இந்த நோய்த் தொற்று தீவிரமடைகிறது.

அறிகுறிகள்: முதலில் பரோட்டிட் சுரப்பியில் வீக்கம் காணப்படுதல். வலி, வாயை திறக்கும் போதும் உணவு உண்ணும் போதும் வலியை உணர்தல், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

நோய் பாதிப்பு: நரம்பு கோளாறுகள், தலை பெரிதாக இருத்தல், மூளையில் ஏற்படும் தொற்று, மூளையில் நச்சுத்தன்மை, முக திமிர்வாதம் போன்றவை இருக்கும்.

தடுப்பு முறைகள்: அதிகப்படியான வீரியம் உடைய தடுப்பூசியினை கொடுத்தால் புட்டாளம்மையை தடுக்கலாம். ஒரே ஒரு தவணை 0.5 தசை வழியாக குறிப்பிட்ட இமினோகுளோபின் கொடுக்கும் போது நோயை பாதுகாக்கலாம்.

தடுப்பு நடவடிக்கை : இத்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சுலபமாக, சிகிச்சை அளிக்கலாம். ஆனால், நோய் முற்றிய நிலையில் இருப்பின் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினம். நோயாளியை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துதல் அவசியம்.

இன்புளுயன்சா

இது பொதுவாக ஃபுளு என்றும் கூறலாம். இது சுவாசப் பாதையை தடை செய்யக் கூடிய தீவிர நோய்த் தொற்றாகும், இன்புளுன்சா வைரஸ் மூலம் பரவக் கூடும். இவை மிகவும் வேகமாக பரவக்கூடியது.

இன்புளுயன்சா வைரஸ் நான்கு வகைகள் A,B,C,D தும்மல், இருமல் (அ) வைரஸ் கிருமிகள் தொண்டையிலிருந்து, சுவாசப் பாதையில் நுழைய வாய்ப்புகள் அதிகம். நோய்த் தொற்று ஏற்பட்ட, 18 – 72 மணி நேரத்தில் நோய் முற்றுகிறது.

அறிகுறிகள்: வைரஸ் நுழைந்தவுடன் சுவாச பாதையை பாதித்து நெக்ரோசிஸ் திசுக்களை அழித்தல் மற்றும் எபிதீலிய செல்களையும் அழித்து, மூச்சுக் குழலை பாதித்து, அவை தொடர்ந்து பாக்டீரியா நோய்த்தொற்று உண்டாக்கி விடும். காய்ச்சல், உடல் சில்லிட்டுப்போதல், வலி, இருமல், பலவீனமாக உணர்தல் இவையெல்லாம் வைரஸினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.

தடுப்பு நடவடிக்கைகள்: இன்புளுயன்சா நோயை தடுப்பது அவ்வளவு எளிதான காரியமன்று. ஏனெனில் அவை மிகவும் வேகமாக பரவக் கூடியது. எனவே, நோயாளியை தனிமைப்படுத்தி, தேவையான தடுப்பூசியை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

தொண்டை அடைப்பான்

இது தீவிர நோய்த்தொற்றுள்ள நோயாகும். டிப்தீரியா பாசில்லை என்ற வெளி நச்சுத் தன்மையால் பரவக் கூடும். இவை அதிகமாக தொண்டை, டான்சில்ஸ், குரல்வளை (அ) மூக்கை பாதிக்கக்கூடும். காற்றுப் பாதையிலுள்ள சாம்பல் நிற வெள்ளைப் படலத்தை அதிக அளவு தாக்கி பரவக்கூடும்.கார்னி பாக்டீரியம் டிப்தீரியா. மேலும் டிப்தீரியா பாசில்லை என்ற வெளி நச்சுத் தன்மையால் பரவக்கூடும்.நோய்த் தொற்று ஏற்பட்ட 2 – 6 நாட்களுக்கு நோய் முற்றிய நிலைக்கு செல்லும்.

அறிகுறிகள்: சுவாசப் பாதையில் தொண்டைப் புண், குரலில் மாற்றம், மூக்கிலிருந்து வெளியாகும் நீர்த்துளிகள், விழுங்குதலில் சிரமம், காய்ச்சல், குரலில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய காரணி ஸ்டீம் – சத்தத்துடன் கூடிய சுவாசம் மூச்சுத்திணறல்.

சிகிச்சை: டிப்தீரியா ஆன்டிடாக்சின் 10,000 – 80,000 கொடுக்க வேண்டும். ஓய்வு முக்கியமாக இதய கோளாறை தடுக்கும். மூச்சுக்குழல் அறுவை சிகிச்சை தேவைப்படும் (சுவாசத்தடை ஏற்பட்டால்).

DPT வாக்சின் (முத்தடுப்பு ஊசி) குழந்தைகளுக்கு BCG – 6வது வாரத்தில் கொடுக்கவேண்டும். DPT வாக்சின் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி நோயைத் தடுக்கும். குழந்தைகளுக்கு வாக்சின் உடன், இளம்பிள்ளை வாத தடுப்பு ஊசி மற்றும் ஊக்குவிக்கும் தவணை 0.5 mlDPT 1 1/2 to 2 yrs வருடத்தில் தொடர்ந்து DT 5 – 6 வருடத்தில் கொடுக்க வேண்டும். தொற்று சந்தேகித்த உடனே நோயாளிகளை தனித்து வைத்தல். மருத்துவமனையில் 14 நாட்கள் தங்க வைத்தல் வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!! (மருத்துவம்)