நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:5 Minute, 29 Second

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

எந்த சந்தர்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.

சாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் , செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட முடியாது.

உறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமற்றலும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.

தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.

கோபம், சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸ்க்கு உண்டு. ஆனால், மன மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும், அழ்ந்த மன பாதிப்புகள் தம்பதிய உறவுக்குப் பெரும் எதிரியாகும்.

தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திரத் தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லை எல்லா மீறல்களும் சிகல்களில் விட்டுவிடும்.

மனமும் உடலும் ஒத்துழைக்கும் வரை அடிக்கடி உளவு கொள்ள முடியும் என்றாலும், தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டல், உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பம் அடைய முடியும்.

வயது அதிகரித்ததும், குழந்தை வளர்ந்ததும் தம்பதிய உளவு கொள்வது பாவம் என்று நினைக்கத் தேவையில்லை. இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடையில்லை.

கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

செக்ஸில்எதுவுமே தவறில்லை என்பதால் இப்படிப் பேசினால் அநாகரிகம், அப்படிச் செய்தால் அநாகரிகம் என்று என்ன தேவையில்லை. படித்தவர்கள், நல்ல வேளையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக்கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொள்ளக்கூடாது. இருவரது விருபங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்கை நெறிப்படி சரியானதுதான்.

தாம்பத்தியம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கும் அடிக்கடி ஏற்படும் என்றாலும், பெண்ணுக்குத் தொல்லை தரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனிவி புரிந்து கொள்ளாத பட்சத்தில், மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசினப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்ச்சிக்க வேண்டும். செக்ஸ் இணைய தளங்களை பார்ப்பது, செக்ஸ் புத்தகத்தை படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றல் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால், அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்கவேண்டும்.

தம்பதிய உளவை அதிகரிக்கும் சக்தி கீரை மற்றும் பலன்களுக்கு உண்டு. மீன் புறா வெள்ளாட்டுக்கறி இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரிச்சம்பழம், பாதம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும் இனிமையும் சேர்க்கக் கூடியவை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post துவையலுக்கு பருப்பு வறுக்க போகிறீர்களா? கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ? (அவ்வப்போது கிளாமர்)