பழங்களும் பயன்களும்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 44 Second

நாம் தினசரி சாப்பிடும் பழங்களில் உடலுக்கு நலம்தரும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஆனால், பழங்களை எந்தெந்த நேரங்களில் சாப்பிட வேண்டும். எந்தெந்த நேரங்களில் தவிர்க்க வேண்டும் என்ற வரைமுறையை நம் முன்னோர் பின்பற்றி வந்தனர். உதாரணமாக, மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளிலும் உடலுக்கு நலம் தரும் சத்துகள் இருக்கின்றன. ஆனால், இப்பழங்கள் மந்தத்தை உண்டாக்கும் தன்மையும் உடையவை. எனவேதான், சில பழங்களை உணவுக்கு முன்னும், சில பழங்களை உணவுக்கு பின்னும் உண்டு வந்தார்கள். அந்தவகையில், பழங்களின் குணங்களை பார்ப்போம்:

நெல்லிக்கனி: அமிர்தத்திற்கு ஒப்பாகிய நெல்லிக்கனியை பகற்பொழுதில் எடுத்துக் கொள்ள பித்தம் நீங்கும். அதன் புளிப்பால் வாயுவும் நீங்கும்.விளாம்பழம்: உணவுக்கு முன்னும் பின்னும் உண்ணலாம். இதனால் உடலுக்கு சுகமும் நல்ல பசியும் உண்டாகும். பித்தம் நீங்கும்

இலந்தைப்பழம்: பித்த மூர்ச்சையைப் போக்கும். இதை பசி நேரத்தில் உண்டால் எரிவு உண்டாகும். எனவே, உணவுக்கு பின்தான் உண்ண வேண்டும்.

வாழைப்பழம்: செவ்வாழை, பேயன்வாழை, ரசதாளி, மொந்தன், அமுக்குவாழை, மலைவாழை, பச்சைவாழை, கருவாழை என்னும் எட்டு வகை வாழைப்பழங்களும் வாத நோய்களை தவிர்க்க உதவும். மேலும், மலமிளக்கியாகவும் பயன்படும்.

பலாப்பழம்: மாரடைப்பு, மலச்சிக்கல், புற்றுநோயை போக்கும். இனிப்புள்ள இப்பழத்தை அதிகம் உண்டால் பல பிணிகளை உண்டாக்கும்.

மாம்பழம்: சருமநோயைக் கட்டுப்படுத்தும். இப்பழத்தை அதிகம் உண்டால் பசியை மந்தப்படுத்தி பிணிகளை உண்டாக்கும்.

அத்திப்பழம்: உஷ்ண சிதமுள்ளது. ரத்த விருத்தியை உண்டாக்கும். மலபந்தத்தை நீக்கும்.

புளியம்பழம்: உடல்சூட்டை தணிக்கும். மலச்சிக்கலை போக்கும். இப்பழத்தை அதிகம் உண்டால் நரைதிரை உண்டாகும்.

நாவல்பழம்: அதி நீரும், வெப்பமும் போக்கும். ரத்தம் விருத்தியாகும். எலும்புகளையும், பற்களையும் வலுப்படுத்தும்.

கொய்யாப்பழம்: நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும் நரம்புகளை உறுதியாக்கும். இப்பழத்தை அதிகம் உண்டால் கரப்பான் உண்டாகும்.

மாதுளம்பழம்: உடல் குளிர்ச்சி அடையும். ரத்தவிருத்தி உண்டாகும். மிகவும் நல்லது.

அன்னாசிப்பழம்: பித்தநோய் போக்கும். அழகு உண்டாக்கும். மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும்.

களாப்பழம்: அதிமந்தத்தில் உண்டால் நற்பசி உண்டாகும். தொண்டை வலியும் தலைகனப்பும் நீங்கும்.

திராட்சைப்பழம்: உடல் குளிர்ச்சியும், ரத்த விருத்தியும் உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அழகு தரும் வளையல் அலங்காரம்! (மகளிர் பக்கம்)
Next post கொழுப்புப் படிதல்… தடுக்க… தவிர்க்க!! (மருத்துவம்)