சுவாசத்தை சீராக்கும் நொச்சி இலை! (மருத்துவம்)
பலருக்கும் தெரிவதில்லை. இவை கிராமங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தற்போது சிட்டிகளிலும் இந்த இலைகள் விற்கப்படுகின்றன.
* இந்த இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சளியினால் ஏற்பட்ட சுவாச அடைப்பு நீங்கும்.
* நீர் நிலைகளில் காணப்படும் நீர் நொச்சி, ஐந்து இலை கொண்ட நொச்சி, கருநிற இலைகள் கொண்ட நொச்சி என மூன்று வகைகளில் காணப்படுகிறது. இதில் கரு நொச்சிதான் அதிக மருத்துவப் பலன் கொண்டது. ஆனால் இது காட்டுப்பகுதி, மலைப்பகுதிகளில் மட்டுமே அரிதாக கிடைக்கிறது.
* நொச்சி இலைகளில் ஒருவித நறுமண வாசனையுண்டு. அவைதான் சுவாசப்பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. கடுமையான நெஞ்சு சளி, இருமல் இருப்பவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலை சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும். இதனுடன் கற்பூரவல்லி அல்லது துளசி சேர்த்து ஆவி பிடிக்கலாம். நொச்சி இலை போட்டு கொதிக்க வைத்த நீரை குளிக்க பயன்படுத்தினாலும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.
* தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள், காய்ந்த நொச்சி இலைகளை புகைமூட்டி அந்த புகையை சுவாசிக்க வேண்டும். ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் இதை தவிர்க்கவும். நொச்சி இலையை கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைபாரம் குறையும். கரு நொச்சி இலைகளின் சாறு, சீதபேதி, உடல் பலவீனம், அஜீரணம், மந்தமாகச் செயல்படும் ஈரல், நரம்பு வலி, செரிமானம், ஆகியவற்றுக்கு பயனளிக்கும்.
* கட்டி, வீக்கத்திற்கு நொச்சி இலைகளை வதக்கி கட்டி மேல் வைத்து கட்ட அவை கரைந்து போகும். நொச்சி பாதிக்கப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வலி, வீக்கத்தை குறைக்கிறது. கை, கால் முட்டி வலிக்கும் நொச்சி இலையை கசக்கி துணி வைத்து கட்டிக் கொள்ளலாம்.
* புண் காயங்களுக்கு நொச்சி இலை சாறை நல்லெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து அதை பாட்டிலில் சேமித்து தினமும் தேய்த்து வர புண் ஆறிவிடும்.
* நொச்சி மலர்கள் அடர்ந்த கத்திரி பூ நிறத்தில் இருக்கும். இதில் உற்பத்தியாகும் தேனுக்கு உடல் வலி, வீக்கத்தைப் போக்கும் தன்மை உண்டு.