கொழும்பு கட்டுநாயக்கவில் சந்தேகத்தின் பேரில் இரு தமிழ் இளைஞர்கள் கைது

Read Time:1 Minute, 5 Second

நீர்கொழும்பு, கட்டுநாயக்க உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் பிரசன்னமாயிருந்த இரண்டு தமிழ் இளைஞர்களை ரோந்தில் ஈடுபட்டிருந்த கட்டுநாயக்கப் பொலீசார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்றிரவு 10மணியளவில் அப்பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிசெய்யத் தவறியமையே கைதுக்குக் காரணமென்றும் அவர் தெரிவித்துள்ளார். கைதான மேற்படி இரு இளைஞர்களிடமும் பொலீசார் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக கட்டுநாயக்க பொலீசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Children of LTTE Leader Piraphaharan (VIDEO)
Next post அம்பாறை நவகிரி குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 5பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்..