மான்இறைச்சி என கூறி நாய்இறைச்சியை விற்றவர் கைது
Read Time:45 Second
நாய் இறைச்சியை மான்இறைச்சி எனகூறி விற்பனை செய்த இருவரை லுணுகலையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. நாய்களை பிடித்து கொலை செய்யும் இவர்கள் அதன் இறைச்சியை மான்இறைச்சி எனக்கூறி விற்பனை செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Average Rating