சிறுமி தினுஷிகா படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

Read Time:1 Minute, 39 Second

மட்டக்களப்பில் சிறுமி தினுஷிகா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், கப்பம் பெறுவதற்காக பிள்ளைகளைக் கடத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தால் மூன்று தினங்களுக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்த்தால் காரணமாக மாவட்டத்தின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பின் பாடசாலைகள், அரச, தனியார் திணைக்களங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பிற்கான பஸ் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்பட்டது. கடந்த 28ம்திகதி கோட்டைமுனை பாடசாலையில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட 08வயது சிறுமியான தினுஷிகா நேற்று முன்தினம் கோட்டைமுனை பாரதி ஒழுங்கையிலுள்ள பாழடைந்த கிணறொன்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியைக் கடத்தியவர்கள் 30லட்சம் ரூபாவை கப்பமாக கோரியிருந்ததாக பொலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதென்று கூறப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “சிறுமி தினுஷிகா படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

 1. The police claims they always shoot the suspects related to these type of cases,but same thing reoccrs within months time .The true reason is real suspects are pilliyan&karuna who are child molesters.

 2. ரொம்ப சரி..
  உண்மையான குற்றவாளிகளை தப்பவைக்க அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள்…
  கொல்லப்பட்ட இவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல…..
  அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல்….
  உண்மையான குற்றவாளிகள் கருணாவோ பிள்ளையானோ…. அது முக்கியமில்லை….
  ஆனால் கொல்லப்பட்ட இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பது மட்டும் உண்மை.

 3. தமிழினத்தின் கோடாரிக் காம்புகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும்.
  யாரை மன்னித்தாலும் இவர்களை மன்னிக்கவே முடியாது!
  சிறுவர் சிறுமிகளுடன் சேஷ்டை செய்வோருக்கு இது ஒரு பாடமாக அமையும்.
  சிங்களர்தான் அறியாமல் கொல்கிறார்களெனில்…
  தமிழரே அறிந்து; அநியாயமாகக் கொல்வதா…

 4. oddakakotha …I agree with your kindly comments…thats right & keep it up.

Leave a Reply

Previous post Troops advance beyond the Karayamullivaikkal Junction (Tamil Version) -VIDEO-
Next post மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருவரைச் சுட்டுக்கொன்றவர் தானும் தற்கொலை