மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருவரைச் சுட்டுக்கொன்றவர் தானும் தற்கொலை

Read Time:1 Minute, 27 Second

மட்டக்களப்பு காத்தான்குடி ரஸா ஆலிம்வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் காலை 7.20அளவில் இடம்பெற்றிருப்பதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமிய மதத் தலைவரும், காத்தான்குடி ஜம்மியத்துல் ஜமாலியா அரபுக்கல்லூரியின் அதிபருமான 65வயதுடைய அல்ஹாஜ் மௌலவி யூ.என்.முபீனும், அவரது சகோதரரான 55வயதுடைய மொகமட் மக்கீன் மற்றும் அவர்களது மருமகனுமான 30வயதுடைய சாஜன் எனவும் கூறப்படுகின்றது. மேற்படி ரஸா ஆலிம்வீதியிலுள்ள வீட்டுக்கு சென்ற மருமகனான சாஜன், இவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திலிருந்து ரி56 ரக துப்பாக்கியும், மகசினும் பொலீசாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி தினுஷிகா படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்
Next post LTTE Video Clip Shows their Activities in NFZ (Tamil Version) – Wanni Operation -VIDEO-