புலிகளின் படைத்துறை பேச்சாளர் படுகாயம்? நேற்று செவ்வி கொடுத்தவர் இன்று படுகாயம்! நாளை பலி?

Read Time:2 Minute, 40 Second

புலிகளின் படைத்துறை பேச்சாளராக செயற்பட்டுவந்த மார்சல் என்று அழைக்கப்படும் இராசைய்யா இளந்திரையன் நேற்றையதினம் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்துள்ளதாக புலிகள் சார்பு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வி என்று தெரிவித்து ஒலிரப்பிய புலிகள் நேற்று அவர் படையினரின் ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார் என்ற செய்தியை பரப்பியுள்ளனர். நாளை அவர் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டதாக தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் என்றால் இவர் எப்போதே கொல்லப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துவிட்டது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இவர் வன்னியை நோக்கிய படை நடவடிக்கையை இராணுவத்தினர் ஆரம்பித்து மடு பகுதியை கைப்பற்ற முயன்றபோது இராணுவம் மடுவை கைப்பற்றினால் நாங்கள் மதவாச்சியை கைப்பற்றுவோம் என்று சூளுரைத்தார். இறுதியில் இராணுவம் மடுவையும் கைப்பற்றி கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன், கரையான்முள்ளிவாய்க்கால் வரை சென்று இன்று அவரும் படுகாயமடைந்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. மதவாச்சியையும் கைபற்ற முடியவில்லை முன்னேறிவரும் இராணுவத்தையும் தடுத்து நிறுத்தமுடியாத நிலையில் புலிகள் ஒடிக்கொண்டுள்ளனர். இவ் இளந்திரையன் தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியான செய்தியில் புலிகள் இயக்கத்தை விட்டு 2004ம் ஆண்டு வெளியேறி இன்று அரச அமைச்சராக இருக்கும் கருணாவுக்கு ஆதவாக இருந்து தகவல் கொடுத்தார் என்ற காரணத்தினால் புலிகளால் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார் என்ற செய்தி முன்னர் வெளிவந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “புலிகளின் படைத்துறை பேச்சாளர் படுகாயம்? நேற்று செவ்வி கொடுத்தவர் இன்று படுகாயம்! நாளை பலி?

 1. மடுவுக்குள் இலங்கை இராணுவம் வந்தால் நாம் மதவாச்சிக்குள் நிற்ப்போம் கூறின இளந்திரையன் இவ்வளவு காலமும் பங்கர் வெட்டிக்கொண்டு இருந்திருக்கின்றர் இப்போ வெட்டஇடம் இல்லாதால் வெளியே வந்துள்ளர் போலும்
  இப்போ துண்டு அளவு நிலத்தில் அப்பாவி மக்களை அடைத்து அதன் நடுவில் தலைவரை விட்டு நம்பியிருந்த மக்களைக் காப்பாற்ற வக்கில்லாமல் இறந்த மக்களை ஒழுங்காக கணக்கெடுத்து அந்தக் கணக்கை காட்டி புலன்பெயர்ந்த தமிழர்களையும் புலம்பெயர்ந்த தமிழ் தெரியாத தமிழர்களையும் கொண்டு உலகநாடுகளின் தலைநகரமெல்லாம் ஒப்பாரிவைக்க வைக்கிறீர்களே!
  இப்பொழுதாவது உண்மையை ஒத்துக்கொண்டு உங்கள் கைகளை தூக்கிக்கொண்டு பெரிசுகளெல்லாம் வெளியே வந்தால் எஞ்சியிருக்கிற குழந்தைப் போரளிகளும் அப்பாவி மக்களும் தப்புவார்கள் அல்லவா?

 2. எதிர்பார்த்த நியூஸ் தான்..
  ஐயாவின் வானொலி பேட்டி எண்டு போடேக்கையே இப்படி நியூஸ் வரும் எண்டு தெரியும்… இருந்து பாருங்கோ இன்னும் கொஞ்ச நாளில ஐயா மரணம் எண்டு வரும்…

  அண்ணல் இவர் எப்பவோ மாவீரர் (துரோகி) ஆகிவிட்டார்… ஹிஹி

 3. mr. thabiah,you got nothing to do,get a life amd move on,manakedda thamila unakku vedkam illaiya —-

 4. இனவாதம், மொழிவாதம் என்றெல்லம் பேசுகிற புலிப் பினாமிகளே…..

  பிரதேசவாதம் இல்லாமலோ, மாத்தையா, கருணா, இப்ப இவர் ஒருத்தர்…..????

  மாத்தையாவின்ர பிரச்சினைக்குப் பிறகு, எத்தனை போராளிகள்,

  பயிற்சியின் போது வீரமரணம்,

  முன்னரங்கில் வீரமரணம்,

  விபத்தில் வீரமரணம்,

  இன்றுவரை உடலமே எடுக்காதநிலையில் வீரமரணம்……..

  அதுமட்டுமோ……இன்றுவரை உயிருடன் இருக்கிறாரோ இல்லையோ என்று தெரியாத முகங்கள் எத்தனை?

  சுனா பானாவுக்கும் இதே கதி தான்….கன காலம் டம்மிங், பிறகு சன் ரீவிக்கு ஒரு பேட்டி….பிறகு, சரியா அவருக்கு மேல விழுந்த குண்டு…அந்த நேரத்தில வெடிச் சத்தம் வேற கேட்டதாம் அங்க…ம்ம்ம்ம்…..

  பால்ராஜ்,,,
  நல்ல ஒருபடை வீரன் காட் அற்றாக் வந்து வீர மரணமாம்….

  இப்பிடி எத்தனை பேர் அவன்ர ஏரியாவிலேயே, கிளேமோர் வெடிச்சு இறந்தவை???

  ம்ம்ம் இதென்ன புலிகளுக்குப் புதிதோ…எத்தனை அப்பாவி மக்களைக் கடத்தி,

  எத்தனை தாய்மார்,
  “எனது பிள்ளை ஒரு பாவமும் செய்யவில்லை, எங்கோ எப்படியோ உயிரோடுதான் இருப்பான், இன்று வருவான், நாளை வருவான்…………”, என்று…….

  எத்தனை மனைவியர்,
  தத்தமது கணவன் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் இன்றுவரை பூவும் பொட்டும் சுமந்து வாழும் நிலையில்…….

  எத்தனை பிள்ளைகள்………..

  “அப்பா”

  என்ற ஒரு சொல்லுக்காய் ஏங்கி………..ஏங்கி……

  எத்தனை வருடமாக ஏக்கமே வாழ்க்கையாக வாழவேண்டிய நிப்பந்தத்துக்கு ஆளாக்கிய மிகப் பெரும் பெருமைக்கு உரிய புலிகளுக்கு கோயில் கட்டும் மக்களே………

  தயவு செய்து….இனியாவது புலி ஒழிந்து….எமக்கெல்லாம் விடிவு வர உதவுங்கள்

Leave a Reply

Previous post wanni meheuma -sri lanka war situation full video.
Next post வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளின் 31 சடலங்கள் கண்டுபிடிப்பு.. முதல்தடவையாக பெருந்தொகையான ஆயுதமும் மீட்பு