புற்றுநோய் பிரிவுக்குச் சொந்தமான சிகிச்சையளிக்கும் இயந்திரமொன்றினைப் பயன்படுத்தி மாணிக்கக்கல் உற்பத்தி செய்தவர் கண்டியில் கைது

Read Time:1 Minute, 21 Second

கண்டி பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்குச் சொந்தமான சிகிச்சையளிக்கும் இயந்திரமொன்றினைப் பயன்படுத்தி மாணிக்கக்கல் உற்பத்தி செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் வைத்திசாலை ஊழியர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புற்றுநோய்ப் பிரிவில் உள்ள இந்திரத்தைப் பயன்படுத்தி அவர் கற்களைப் பளிச்சிடச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த வேளையில் இவர் அகப்பட்டுள்ளார். கண்டி பொலீசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இவர் பத்து லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இதன்மூலம் ஈட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் மாணிக்கக்கல் உற்பத்தி செய்வதற்கு குறித்த நபர் பயன்படுத்திய இயந்திரமானது ஐந்து கோடி ரூபாய் பெறுமதி மிக்கதென்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post wanni meheuma -sri lanka war situation full video.
Next post தமிழ் கட்சிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு முகாம்களுக்கு விஜயம்