கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, பிள்ளைகள் கைது

Read Time:1 Minute, 36 Second

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி பொறுப்பாளர் சூசையின் மனைவி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்ல முயன்ற போதே சூசையின் மனைவியும் அவரது மகன், மகள் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகக் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்தே இவர்கள் இன்று (15) காலையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் ஆறு இலட்சம் ரூபா பணமும் ஒரு தொகை நகைகளும் காணப்பட்டன. இவர்கள் அனைவரும் புல்மோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தேவி புதல்வன்சரேஸ்(16) மகள் மதி(17) உட்பட குடும்பத்தினரே கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முற்பட்டவேளை கடற்படையினரால் கைது செய்யப் பட்டவர்களாவர். இதேவேளை, இராணுவத்தின் 58வது பிரிவினர் சுனாமி கிராம மக்களையும் பகுதியையும் படையினர் விடுவித்துள்ளனர். இப்பகுதியில் அமைந்திருந்த வீடுகளில் கனரக ஆயுதங்கள் மற்றும் எறிகனைகள் என்பன மறைத்து வைத்திருந்ததையும் படையினர் கணடெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, பிள்ளைகள் கைது

  1. விடுமுறைக்கு வீடு செல்லும் ராணுவம் உடம்பெல்லாம் நகைகளை போட்டு கொண்டு போவினம் தாலிக்கொடி கூட,,, எண்டு கேள்விப்பட்டு இருக்கிறோம்…

    இவர்களுமா?

  2. புலிகளோ யுத்தம் இல்லாத போது மக்கள் சலிப்படைந்து போவார்கள் என்றும் போராளிகள் மன மாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அடுத்த இயக்கத்தவரையாவது போட்டுத் தள்ளுவதில் ஊக்கம் கொடுத்து. அந்த போர் மூடில் போராளிகளை வைத்திருக்க முயன்றார்கள்.சொறிந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல போரையும் வலிந்து தொடுத்தனர்.
    புலிகளது ஆயுதத்துக்கு பயந்தே புலி வாலை விட முடியாமல் அநேகர் இருந்தனர்அவர்கள் 30 வருடத்தில் பட்ட துன்பம் ஏராளம். ஆனால் அதுக்கு அவர்களுக்கு பட்டதோஅல்லது கிடைத்த நின்மதியோ ஒரு துளி கூட கிடையாது. ஆயுதம் மக்களின் உனர்வுகளையும் உரிமைகளையும் அடக்கியதே தவிர, அதை மக்களுக்கு எதுவும் பெற்று தரவில்லை. இறுதி நேரத்தில் கூட மக்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் ஆயுதத்தை காப்பாற்றவே புலிகளின் வியாபாரிகள் உலகம் முளுவதும் ஓலமிட்டனர்.
    யுத்தத்தின் பின் சமாதானம் இப்படியும் வரும்? அமெரிக்க ஜப்பான் போரின் பின்னும் , ஜெர்மன் ஐரோப்பிய போரின் பின்னும் சமாதானம் வந்தது. அங்கே வாழும் மக்கள் வெறுத்து விட்டால் அடுத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று ஜேவீபீ மற்றொரு புரட்சிக்குத் தயாரில்லை. இலங்கை வாழ் தமிழரும் இன்னொரு இழப்புக்கு தயாரில்லை.

    பிற்குறிப்பு
    முன்னாள் பிஸ்டல்குழு தலவன் தமிழ்செல்வனின் மனைவி கூட தன புதிய காதலனுடன் புது வாழ்வு அமைக்க ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டார்.

Leave a Reply

Previous post இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சுசையின் மகள் மைத்துனி உட்பட முக்கிய புலியுறுப்பினர்கள் சிலர் கடற்படையால் கைது.. பெருந்தொகைப் பணமும் நகைகளும் மீட்பு!!
Next post Sri Lanka News / Wanni Rescue Operations / Farah 3 captured -VIDEO