விடுதலைப் புலிகளின் தலைவர் சுட்டுக்கொலை!! : பாதுகாப்பு அமைச்சு

Read Time:2 Minute, 26 Second

anineues-bildவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரும், அவருக்கு நெருக்கமான முக்கிய தலைவர்களும் வாகனம் மூலம் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஏ.எவ்.பி. குறிப்பிட்டுள்ளது. “அவரும் மேலும் இருவரும் வாகனத்திற்குள் கொல்லப்பட்டனர். உத்தியோகபூர்வ அறிவிப்பு பின்னர் மேற்கொள்ளப்படும்” எனப் பெயர்குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். அவர்கள் தப்பிச்சென்ற வாகனம் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற முற்பட்டபோதும், இராணுவத்தினர் அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவ்வாகனம் தீப்பிடித்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமையைத் தொடர்ந்து கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் கொழுத்தப்பட்டன. இதேவேளை, விடுதலைப் புலிகளின் மகன் சார்ள்ஸ் அன்டனி, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், தளபதிகளில் ஒருவரான ரமேஷ், புலனாய்வுப் பிரிவின் துணைத்தலைவர் கபில் அம்மான் ஆகியோரும் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

11 thoughts on “விடுதலைப் புலிகளின் தலைவர் சுட்டுக்கொலை!! : பாதுகாப்பு அமைச்சு

 1. தலைவரின் நிழலக்கூட சிங்களவனால் நெருங்க முடியாது
  நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்

 2. பிரபாவின் உடலை மட்டுமல்ல நிழலை கூட இலங்கை இராணுவம் நெருங்க முடியாது.
  நம்புங்கள் நாளை தமிழீழம் நாளை பிறக்கும்

  நிம்மதி நிம்மதி நிம்மதி

 3. பேடிகளே….இனவெறிகொண்ட பயங்கரவாத சிங்கள அரசின் பொய்ப்பரப்புரைகளை நம்பி கனவுகண்டு கொண்டிருக்காமல் அங்கு அநியாயமாக அழிக்கப்படும் உன் சொந்தங்களை காப்பாற்ற எதாவது செய்யப்பார்….

 4. தமிழ் செல்வனின் மனைவி தன புது காதலனுடன் புது வாழ்வு அமைக்க இராணுவத்திடம் வந்து சேர்ந்தாள். சூசையின் மனைவி பிள்ளைகள் தன தங்கை குடும்பம் சகிதம் இயக்கத்துக்கு சேர்த்த பணம் பவுண் ஆகியவற்றையும் சுருட்டிகொண்டு தப்பிஓடும்போது இராணுவத்திடம் பிடிபட்டாள்.

  ஆனால் நடேசனின் மனைவி (சிங்கள மொழி பேசுபவர்) கடைசிவரையும் ஆயுதம் ஏந்தி போராடி வீர மரணம் அடைந்தார்

 5. முப்பது வருடமாக ஏனோ இன்னொரு பிரபாகரன் உருவாகவில்லை
  ஆனால் இனித்தான் ஆயிரம் பிரபாகரன் உருவாகபோகிறார்கள்
  நம்புங்கள் நாளை பிறக்கும் தமிழ் ஈழம்

 6. நம்புங்கள் நாளை பிறக்கும் தமிழ் ஈழம்
  பிரபாவின் நிழலை கூட இராணுவத்தால் நெருங்க முடியாது
  நம்புங்கள் நாளை பிறக்கும் தமிழ் ஈழம்

  Skicka dina barn och pengar omedelbart !

  Send dine barn og penger umiddelbart !

  Stuur uw kinderen en geld onmiddellijk !

  Schicken Sie Ihre Kinder und das Geld sofort !

  Envoyez vos enfants et de l’argent immédiatement !

  Send dine børn og penge straks !

  Send your children and money immediately !

  நம்புங்கள் நாளை பிறக்கும் தமிழ் ஈழம்

 7. நீதிபதி சமரி டனன்சுரியவின் கட்டளைப்படி அனுராதபுர வைத்தியசாலையில் பிரபாகரனின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். புலித் தலைவன் பிரபாகரனின் தலையுக்குள் வெறும் வெடிமருந்து மட்டும்தான் இருந்ததாம்

 8. நீதிபதி சமரி டனன்சுரியவின் கட்டளைப்படி அனுராதபுர வைத்தியசாலையில் சுப்ரமணியம் ரவிச்சந்திரன் பிணத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். புலைவன் சுப்ரமணியம் ரவிச்சந்திரனின் தலையுக்குள் வெறும் வெடி மட்டும்தான் இருந்ததாம்

Leave a Reply

Previous post பிரபாகரன் என்ன ஆனார்???
Next post பிரபாகரன் மகன் ஆண்டனி, புலித்தேவன், நடேசன் கபில் அம்மான், சுதர்மன், இளங்கோ உள்பட முக்கிய தலைவர்கள் மரணம்..