பிரபாகரன் மகன் ஆண்டனி, புலித்தேவன், நடேசன் கபில் அம்மான், சுதர்மன், இளங்கோ உள்பட முக்கிய தலைவர்கள் மரணம்..

Read Time:4 Minute, 39 Second

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன், உளவுப் பிரிவு துணைத் தலைவர் கபில் அம்மான், இன்னொரு முக்கிய தலைவர் ரமேஷ் ஆகியோர் மரணமடைந்து விட்டதாக இலங்கை ராணுவத்தை மேற்கோள் காட்டி இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் உறுதி செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சார்லஸ் அந்தோணியின் உடலை மீட்டுள்ளதாக ராணுவத்தின் சிறப்புப் பிரிவு வீரர்கள் தெரிவித்துள்ளதாக ராணுவ தலைமையகம் தெரிவித்தது. இன்று காலை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் சார்லஸ் அந்தோணியை தப்ப வைக்க முயன்றாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் ராணுவம் கூறியது. அதன் பின்னர் அப்பகுதியிலிருந்து சார்லஸ் அந்தோணியின் உடலை ராணுவத்தின் சிறப்புப் பிரிவு வீரர்கள் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறின. இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட உடல் சார்லஸ் அந்தோணியின் உடல்தான் என்பதை ராணுவம் உறுதி செய்துள்ளதாக இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் சற்று முன் செய்தி வெளியிட்டுள்ளது. சார்லஸ் அந்தோணி, பிரபாகரனின் மூத்த மகன் ஆவார். புலிகள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைமை தாங்கி வந்தார். விமானப்படைப் பிரிவான வான் புலிகள் பிரிவை உருவாக்கி அதை செயல்படுத்தி வந்தவர் சார்லஸ்தான்.

நடேசன், புலித்தேவனும் மரணம்..:

அதேபோல அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் மற்றும் அமைதி செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை அரசின் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கை காவல்துறையில் காவலராக முன்பு பணியாற்றியவர் நடேசன். சுப. தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின்னர் நடேசன் அரசியல் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரமேஷ் என்பவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கபில் அம்மான், சுதர்மன், இளங்கோவும் பலி..

இவர்கள் தவிர கரையமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து
விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல்துறைப் பிரிவின் தலைவர் இளங்கோ, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனியின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சுதர்மன், விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த கபில் அம்மான் ஆகியோரின் உடல்களை ராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர்.

அந்தப் பகுதி முழுவதும் ஏராளமான விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடப்பதாகவும், அவற்றை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை இணையதளம் தெரிவித்துள்ளது.

கபில் அம்மான், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் உதவியாளர் ஆவார். புதுக்குடியிருப்பை ராணுவம் கைப்பற்றியபோது நடந்த சண்டையில் கபில் அம்மான் படுகாயமடைந்தார். பின்னர் இரணைப்பாலை என்ற இடத்தில் கபில் அம்மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

கபில் அம்மானின் ரகசிய வீட்டையும் அந்த சமயத்தில் ராணுவம் கண்டுபிடித்து கைப்பற்றியது என்பது நினைவிருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

9 thoughts on “பிரபாகரன் மகன் ஆண்டனி, புலித்தேவன், நடேசன் கபில் அம்மான், சுதர்மன், இளங்கோ உள்பட முக்கிய தலைவர்கள் மரணம்..

 1. My sincere gratitude towards the security forces who fought to save mother Sri Lanka and many brave soldiers who sacrificed their life for us. We should get together and join hands in helping the families of those brave soldiers and take care of their children as they are the true freedom fighters of our modern times. GOD BLESS THE FORCES

 2. You all are traitors of Tamils and you wish all these fault news should be true. Mahindavukku vaal pidikkum eenammmatta jeevankal.

 3. தலைவரின் நிழலக்கூட சிங்களவனால் நெருங்க முடியாது
  நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்

 4. பிரபாவின் உடலை மட்டுமல்ல நிழலை கூட இலங்கை இராணுவம் நெருங்க முடியாது.
  நம்புங்கள் நாளை தமிழீழம் நாளை பிறக்கும்

  நிம்மதி நிம்மதி நிம்மதி

 5. உடல்கள் கைப்பற்றினது ரொம்ப அவமரியாதை..
  மற்றவர் உடலில் குண்டு கட்டி உடலை சிதற அடித்த இவர்களால் தம் உடலில் கட்டி தம் உடலை சிதற அடித்து எதிரி கைபற்றாமல் ஏன் செய்ய முடியவில்லை?
  அது தானே வீரம்…

 6. தமிழ் செல்வனின் மனைவி தன புது காதலனுடன் புது வாழ்வு அமைக்க இராணுவத்திடம் வந்து சேர்ந்தாள். சூசையின் மனைவி பிள்ளைகள் தன தங்கை குடும்பம் சகிதம் இயக்கத்துக்கு சேர்த்த பணம் பவுண் ஆகியவற்றையும் சுருட்டிகொண்டு தப்பிஓடும்போது இராணுவத்திடம் பிடிபட்டாள்.

  ஆனால் நடேசனின் மனைவி (சிங்கள மொழி பேசுபவர்) கடைசிவரையும் ஆயுதம் ஏந்தி போராடி வீர மரணம் அடைந்தார்

 7. Hi guys
  u all r foolllllllllllllllllleeeeeeeee soon seen they will back on media
  byeeeeeeeee

 8. up’s and down’s are common. but ultimate victorey only counts.wait and seeeeeee.soon tamil eelam.

 9. பிரபாவின் உடலை மட்டுமல்ல நிழலை கூட இலங்கை இராணுவம் நெருங்க முடியாது.
  நம்புங்கள் நாளை தமிழீழம் நாளை பிறக்கும்

  நிம்மதி நிம்மதி நிம்மதி

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகளின் தலைவர் சுட்டுக்கொலை!! : பாதுகாப்பு அமைச்சு
Next post கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு-ராணுவம் குவிப்பு