திட்டமிட்ட படுகொலை: புலிகள் குற்றச்சாட்டு

Read Time:2 Minute, 8 Second

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோனி, பா.நடேசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இலங்கை ராணுவம் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் புலிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக புலிகள் அமைப்பின் ஆதரவு இணையதளம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது: வன்னி காட்டுப் பகுதியில் 1000-த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்தனர். இவர்களை உடனடியாக வெளியேற்றி சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யுமாறு செஞ்சிலுவை சங்கத்தின் தலைமை அலுவலகத்தை புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசனும், இந்த அமைப்பின் மற்றொரு நிர்வாகியான பூலித்தேவனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இந்நிலையில், இவர்கள் செஞ்சிலுவை சங்கத்தை தொடர்புகொண்ட சில மணி நேரத்துக்கு பின் வெளியான பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் நடேசன், பூலித்தேவன், சார்லஸ் அந்தோனி ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப் பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை அறிந்த புலிகள், இது திட்டமிட்ட படுகொலை என குற்றம் சாட்டியுள்ளனர். போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ளதாக நாங்கள் அறிவித்த நிலையிலும், அதற்கு உடன்படாமல் இலங்கை அரசு திட்டமிட்டு இந்த படுகொலைகளை நிகழ்த்தியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “திட்டமிட்ட படுகொலை: புலிகள் குற்றச்சாட்டு

  1. ஐயோ…அப்ப என்ன அவங்கள் நடேசனுக்கும் மற்றவருக்கு விருந்தா கொடுக்க முடியும்….
    யுத்த நிறுத்தம் கேட்டினமாம்…. வெக்கமாக இல்லை.?…. சக இனத்து மாற்று இயக்க போராளிகளை சுற்றி வளைத்து கொடூரமாக கொன்ற நீங்கள், சுற்றி வளைப்பு என்றால் என்ன ? தப்ப வழியில்லாமல் கொடூரமாக கொலை செய்யப்படுவது எப்படி? எண்டு இப்ப புரிந்து இருக்கும்…..
    அந்த வீரம் எல்லாம் எங்கே போயிற்று?

    யுத்தம் முடிந்தது எண்டு ராணுவம் அறிவித்தது… புலம் பெயர் தமிழர் விழிப்பாக இருங்கள்…. இனியும் மக்கள் இறந்தால், நாம் வீதிக்கு இறங்கி போராடுவோம்…..
    நாங்கள் மக்களுக்காக போராடும் அடங்காப்பற்று உடைய தமிழர் தானே..

Leave a Reply

Previous post ’33’: முடிவை அன்றே உணர்ந்தாரா பிரபாகரன்?
Next post பிரபாகரன் வீர மரணம்