பிரபாகரன் உள்ளிட்டோர் உடல்களை அடையாளம் காட்டிய கருணா!

Read Time:3 Minute, 2 Second

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினரின் உடல்களை, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசுப் படைகளுக்கு ஆதரவாக மாறி, புலிகள் வலுவிழக்க முக்கிய காரணமாக இருந்த கருணாதான் அடையாளம் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் குறித்து இலங்கை ராணுவத்திடம் முழுமையான தகவல்கள் இல்லை. முன்னாள் புலிகள் இயக்கத்தினரை வைத்துத்தான் பிடிபட்டவர்களையும், கொல்லப்பட்டவர்களையும் அவர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளைக் கொன்றதாக ராணுவம் அறிவித்தது. இந்த சண்டையின் போது பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக அது கூறியது. இவர்களில் பிரபாகரன் இறந்தது குறித்து குழப்பச் செய்திகளை வெளியிட்ட இலங்கை ராணுவம் இன்று பிற்பகல் தான் பிரபாகரனின் இறந்த உடலை வீடியோ படமாக வெளியிட்டது. இந் நிலையில் நேற்று கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் உடல்களை அடையாளம் காணும் பணியில் கருணாவை ஈடுபடுத்தியுள்ளது இலங்கை ராணுவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கருணா ஒவ்வொரு உடலையும் அடையாளம் காட்டி, அது யார், என்ன என்ற விவரத்தை ராணுவத்திற்குத் தெரிவித்துள்ளார். அதன்படி பொட்டு அம்மான், பா.நடேசன், புலித்தேவன் சார்லஸ் அந்தோணி, அவரது உதவியாளர் சுதர்மன், போலீஸ் பிரிவு தலைவர் இளங்கோ, படைப் பிரிவுத் தலைவர்கள் பானு, ஜெயம், படைப் பிரிவு சிறப்புத் தலைவர் ரமேஷ், உளவுப் படை மூத்த தலைவர் தாமஸ், படைப்பிரிவு தலைவர் லட்சுமணன், கடற் பிரிவு முக்கிய தலைவர் ஸ்ரீராம், பெண்கள் படைப் பிரிவின் மூத்த தலைவியான இசையருவி, உளவுப்படை துணைத் தலைவர் கபில் அம்மான், பெண்கள் படை பயிற்சிப் பிரிவு தலைவி அஜந்தி, மார்ட்டர் பிரிவு தலைவர் வரதா, பிரபாரகனின் செயலாளர் புதியவன், படைப்பிரிவின் சிறப்புத் தலைவர் ஜனார்த்தனன் ஆகியோரை கருணா அடையாளம் காட்டியுள்ளார். பிரபாகரனின் உடலையும் அவரேதான் அடையாளம் காட்டியிருப்பார் எனத் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

19 thoughts on “பிரபாகரன் உள்ளிட்டோர் உடல்களை அடையாளம் காட்டிய கருணா!

 1. பின்பு போகப்போற பிணம் முன்பு போன பிணங்களை அடையாளம் காட்டுகிறது. அந்நேரம் தமிழர்கள் இரண்டாவது தீபாவளி கொண்டாடுவோம்..வாழ்க தமிழ்! ஒழிக ஒட்டுண்ணிகள்…..

 2. also we dont want aney tamil leaders. event goverment must kill duglos dhavananda

 3. பின்பு போகப்போற பிணம் முன்பு போன பிணங்களை அடையாளம் காட்டுகிறது. அந்நேரம் தமிழர்கள் இரண்டாவது தீபாவளி கொண்டாடுவோம்..வாழ்க தமிழ்! ஒழிக ஒட்டுண்ணிகள்…..

 4. ஐயோ இங்க புலம் பெயர் வீடுகளில சமயலெ இல்ல. இது கனவா இருக்காதோ என்டு ஏங்குதுகள் பொம்புளையள்.

  http://www.defence.lk

  யில வேற கச்சைத் துண்டோட காட்டி, கடைசியா அவரைக் கவர்ச்சியாவும் பாக்க வைச்சிட்டானுகள் எண்டு திட்டினம்.

  இவ்வளவு நாளும், இவேன்ர மனசுக்குள்ள கவர்ச்சியா இருந்தவரெல்லோ, இந்த மாயக் கண்ணன்…ம்ம்

  கொலைக் கண்ணன்.

  எத்தினை பேற்ற செத்த உடலத்தையே, குடும்பத்தாருக்குக் காட்டாமல் டம் பண்ணினார்..இண்டைக்கு, கொள்ளி வைக்கிற பிள்ளையும் அவருக்கு முன்னாலையே போட்டுது. சொல்லி அழ், மனிசி, மகளும் இல்லை.

  எத்தினை பேருக்கு மண் அள்ளிப் போட்டாய், இண்டைக்கு அநாதைப் பிணமாய்….

  ஊண்மையிலேயே, ஒரு பூத உடலுக்கு செலுத்த வேண்டிய இறுதி மரியாதை கூட செலுத்த மனமில்லாமல் இருக்குதே…

  புலம் பெயர் நாடுகளில் உள்ள

  மிச்சமுள்ள புலிப் பினாமியளே, மதிப்புக்குரிய தமிழ்த் தாய்க்குலமே
  தயவு செய்து,
  இனியாவது,

  “அவர் சாகேல்ல”, “இவர் வருவார்”, “தலைவர்”, “வீரர்”, “விழித்தெழுவார்”, “கிழித்தெழுவார்” எண்ட வீர வசனங்களை விட்டு விட்டு, உங்கடை குடும்பம், குழந்தையள், புருசன்மாரைக் கவனியுங்கோ.

  உங்கடை வருங்காலச் சந்ததியாவது….
  இப்பிடியான சாத்தானுகளின்ர நிழலோ, நினைப்போ இல்லாமல் மனித சந்ததியாக வளர ஒரு நல்ல சூழலை உருவாக்குங்கள்.

  முதல்ல, இந்த protest இலிருந்து வெளிய வாங்கோ…புலிகளின்ர படங்களை எரியுங்கோ, தீக்குளிச்சவேன்ர படங்களை தீ வையுங்கோ…மறவுங்கோ கசப்பெல்லாத்தையும்

  கலை, கலாசாரம், பண்பாடு, கோயில், குளம், உறவு, அன்பு, பண்பு, ….இப்பிடி நல்லதைப் பழக்குங்கோ.

 5. please thing u r also tamil. oneday it happand 4 u.please do something to tamil people .fotget about past .

 6. Karuna will stay in the history as he not only betrayed Pirabakaran was alive even after his deth. Karuna……you’re a milestone in traitors world. You rather kill your self

 7. பின்பு போகப்போற பிணம் முன்பு போன பிணங்களை அடையாளம் காட்டுகிறது…. hey i like it man……. தலைவர்ட மசிற கூட இவங்களால் புடுங்க முடியாது….

 8. thuroki eddappan lick mahindas all ………………………………………………………….you cant sleep god will punish you. RIP Karuna 01.01.2010

 9. பேத்தையன் பிரபா இறந்ததைக் கேள்விப்பட்டு, இவங்களுக்கு விசர் பிடிச்சிட்டு…
  என்ன பேசிறது என்றே தெரியவில்லை….

 10. உள்ள விட்டு அடிப்பார் என்டு எண்ணியே சுய இன்பம் கண்ட இவர்கள், இப்ப தலைவர் திரும்பி வருவார் எண்டு எண்ணியே சுய இன்பம் காண்கினம்….

  அப்படி நினைத்து உங்கள் தலைவருக்கு இறுதி மரியாதை செய்யத்தவறி விடாதீர்கள்….

  நல்லவனோ கெட்டவனோ, மரணத்தின் பின் ஒருவரும் தூற்றாதீர்கள்…….

  MAY HIS SOUL REST IS PEACE..

 11. எங்கட பிள்ளைகள் உயிரை பயணம் வைத்து சண்டை பிடிக்கும்போது தலைவேர்கள் கண்ணாடி பார்த்து கவனமாக சவரம் செய்து கொண்டிருந்தனர்.

  எங்கட பிள்ளைகள் எதிரியிடம் பிடிபடுவோம் என தெரிந்த போது சயநைட் குப்பியை கடித்தனர். எதிரி சுற்றி வளைத்ததும் தலைவேர்கள் தம் உயிரை காக்க சயநைட் குப்பியை ஏறிந்துவிட்டு எதிரியிடம் சரண் அடைந்தார்

  கோழைத் துரோகிகள் ஒரு அஞ்சலி கூட இல்லாது எரிந்து சாம்பலாகி விட்டார்கள்

  எங்க பிள்ளைகள் தான் உண்மையில் மாவீரர்.
  சரண் அடைந்த தலைவேர்கள் கொலைகார கோழை துரோகிகள்

Leave a Reply

Previous post The Dead Body of Velupillai Piribhaharan – Sri Lankan Tamil News
Next post SLA Positively identifies the body of Prabhakaran 19/05/2009