புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப் பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மகிந்த ராஜபக்ச அறிவிப்பு

Read Time:1 Minute, 45 Second

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜியுடன் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரபாகரன் கொல்லப்பட்ட விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். பேச்சின்போது, இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப் பணிகளை செய்வது தொடர்பாகவும் அதிகாரப்பரவல் குறித்த நடவடிக்கை எடுப்பது தொடாட்பிலும் இருவரும் தகவல் பரிமாறியதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி விஷ்ணு பிரசாத் இதுபற்றி தெரிவிக்கையில், இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டுப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட விடயத்தையும் அவர் உறுதிசெய்தார். இந்நிலையில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்து தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் அதிகாரப்பகிர்வை நிறைவேற்ற வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப் பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மகிந்த ராஜபக்ச அறிவிப்பு

 1. ரஜீவ் காந்தியின்ர ஆத்மா சாந்தி அடையும் நாள் வந்து விட்டது. சோனியா அம்மையாரே, நீங்கள் கண்ணகி கதையினைப் படியுங்கள் ஒரு முறை.

  அன்பான் ப்ரியங்கா, மற்றும் ராகுல் காந்தி அவர்களே, நீங்கள் தந்தையினை இழந்த சோகம், நானும் அறிவேன்.

  இருந்தாலும், உங்கள் தந்தையின் பெருமை இன்றும் உலகில், உங்கள் அனைவரினதும் பெயர்களினூடாக் மேலும் ஒளிர்கிறது.

  ஆனால் இந்தக் கொடும் பாவி மட்டும்……

  உங்கள் மனதில் ஒரு சுகம் உணர்வதினை, நானும் உணர்கிறேன்……அந்த வகையில், என் போல், உங்கள் போல் பலாயிரம் பிள்ளைகள், பெண்கள் நின்மதிப் பெரு மூச்சு விடுகின்றனர் இன்று.

  தயவு செய்து இதை வாசிக்கும் இந்தியப் பிரஜைகளே, இனி, இலங்கை மக்கள் அனைவரும் உங்கள் சகோதரர்கள் என்பதினை உணருங்கள்.
  உங்கள் நாட்டு எதிரி, நரகாசுரன் அழிந்தான்.

 2. ஈளத் தமிழரின் கண்ணீர் காந்திகுடும்பத்தை

  நிம்தியாக வாழவிடாது. அதுமட்டுமல்ல அவர்கள்

  கண்ணீருக்கு யார் யார் காரணமோ அவர்களையும்

  தான்….

 3. அது ஈழத் தமிழரின் கண்ணீர் அல்ல…
  அது ஈனத் தமிழரின் கண்ணீர் என சொல்லும்!
  அப்படி உங்கள் கண்ணீர், காந்தி குடும்பத்தை நல்லா வாழவிடாது என்றால்…
  இப்போது பிரபாவை வாழவிடாததுக்கு… அப்ப சகோதரப் படுகொலையில்
  பிள்ளைகளை இழந்த எமது தமிழ் தாய்மார்களின் கண்ணீர்தான் காரணம் என்பதை ஒப்புக்கொள்ளும்!

Leave a Reply

Previous post ஆலையடிவேம்பு கிரனைட் வீச்சு, ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்
Next post Wanni Operation 19 th May 2009 (KarunaAmman & ThayaMaster Idented Pirabaharan BODY)