புலிகளுடனான இராணுவ வெற்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாது -தமிழ்ப் புத்திஜீவிகள்

Read Time:1 Minute, 54 Second

புலிகளுடனான இராணுவ வெற்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். நிரந்தரமான சமாதானத்தை எட்ட வேண்டுமாயின் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தின் அவசியம் விஞ்சி நிற்கிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது. டொக்டர் தேவநேசன் நேசையா, சீலன் கதிர்காமர், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, எஸ்.சிவதாசன், எனல்.என்.பாலரட்ணராஜா, எஸ்.சின்னையா, எஸ்.மாழவராயர், அனிதா நேசையா, வீ.பொன்னம்பலம், டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, எஸ்.சுமதி, செல்வி திருச்செந்தூரன் மற்றும் ஆர்.விசாகப்பெருமாள் ஆகியோhர் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். அரசிற்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது நிராயுதபாணிகளான அபாப்வி தமிழ்ப் பொதுமக்களே என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே தமிழர் அபிலாசைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டமொன்றை அரசு முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “புலிகளுடனான இராணுவ வெற்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாது -தமிழ்ப் புத்திஜீவிகள்

  1. இவர்கள் எல்லோரும் தமிழ் புத்திஜீவிகள் அல்லர்.
    இவர்கள் எல்லோரும் புலிகளின் புத்திஜீவிகள்!
    இவ்வளவுகாலமும் புலிகளின் புகழ்பரப்பிய புத்திஜீவிகள்…
    இப்போது தாங்கள் தப்புவதற்காக வாய்திறந்தவர்கள்!

    தமிழ் புத்திஜீவிகள் அனைவரையும் புலிகள் என்றோ கொன்றொழித்துவிட்டனர்.

  2. தம்பி காந்தன்!
    காலம் இப்போ ரொம்ப மாறிப்போச்சு!
    கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் மற்றும் கதாநாயகன் பிரபாவின் “தமிழீழம்” எனும் திரைப்படம் உலக திரையரங்குகளை விட்டு இப்படி ஓட்டமெடுக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டீர்கள்.
    ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்திருங்கள்… இப்போதெல்லாம் (உங்கள் சிந்தனைப்படி) வில்லன்கள் இருந்தாலே போதும் படம் ஓகோ… என்று ஓடும்!

    எதிர்வரும் காலங்களில் இலங்கை எனும் படமாளிகையில் “மாநில சுயாட்சி” எனும் திரைப்படம் ஓகோ என ஓடப்போகிறது. விசிலடிக்கக் காத்திருங்கள்!

Leave a Reply

Previous post பிரபாகரனின் உடலுக்கு தேவைப்படும் பட்சத்தில் மரபணு பரிசோதனையும் நடத்தப்படும்.. சரணடைந்துள்ள புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்கும் -அமைச்சர் ரம்புக்வெல
Next post Sri Lanka Rupavahini Daya master & Karuna Idetifide Prabha 19 05 00