பிரபாகரனின் உடலுக்கு தேவைப்படும் பட்சத்தில் மரபணு பரிசோதனையும் நடத்தப்படும்.. சரணடைந்துள்ள புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்கும் -அமைச்சர் ரம்புக்வெல

Read Time:1 Minute, 39 Second

படையினரிடம் சரணடைந்துள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்குமென்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதேநேரம் வே.பிரபாகரனின் சடலம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் மரபணு பரிசோதனையும் நடத்தப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பொட்டம்மானின் சடலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட பிரபாகரனின் சடலம் பிரபாகரனின் சடலம் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை படையினரிடம் சரணடைந்த புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவெடுக்கும். ஆனால் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். 1971 மற்றும் 1988 1989 காலப்பகுதியில் சரணடைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டன. இப்போது எம்.பிக்களாகவும் இருக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பிரபாகரனின் உடலுக்கு தேவைப்படும் பட்சத்தில் மரபணு பரிசோதனையும் நடத்தப்படும்.. சரணடைந்துள்ள புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்கும் -அமைச்சர் ரம்புக்வெல

  1. தலைவரின் உடல் கருகி போய் விட்டது… அடையாளம் காண முடியவில்லை . DNA செய்ய வேண்டும் எண்டு எல்லாம் கூறி விட்டு இப்போ நல்ல வடிவான ஒரு உடலை தலைவர் எண்டு காட்டுகினம்….
    என்ன மாயமோ?

Leave a Reply

Previous post வடக்கு, கிழக்கில் 265,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
Next post புலிகளுடனான இராணுவ வெற்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாது -தமிழ்ப் புத்திஜீவிகள்