பிரபாகரனின் மரண சான்றிதழை இந்தியா கோருகிறது

Read Time:1 Minute, 50 Second

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கொல்லப்பட்டுள்ள தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சான்றிதழை தமக்கு வழங்குமாறு இந்தியா கோரியுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் ஊடகங்களிலும் மேடைகளிலும் தெரிவித்தது. இந்த நிலையில் அவர் இறந்தமையை உறுதிப்படுத்தும் வகையில் மரண சான்றிதழ் தமக்கு தேவை என இந்தியா கோரியுள்ளது. இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த வேளையிலேயே இதனைக் கோரியுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணையை முடிவுறுத்தும் பொருட்டு தமக்கு அவரது மரணச் சான்றிதழ் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கூறிய அதேவேளை மரணச்சான்றை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Over 100000 Sri Lankans Gather To Celebrate LTTE Defeat (Tamil News Version)
Next post சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் -அரசாங்கம்