விடுதலைப் புலிகள் பெண் படையின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழினி கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் பெண் படையின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப்பிரமணியம் சிவத்தாய் என்ற தமிழினி புதன்கிழமை கைது செய்யப்பட்டார். வவுனியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஈழத்தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமில் ஒளிந்திருந்த தமிழினி, அரசு கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைய முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு பகுதியில் புலிகளுக்கு எதிராக ராணுவம் கடைசிக் கட்டத் தாக்குதலில் ஈடுபட்டிருந்த போது தமிழினி, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் மக்களுடன் சென்றார். முகாமுக்கு செல்வதற்கு முன்னதாக அவர் தான் வைத்திருந்த துப்பாக்கி, சயனைடு குப்பி போன்றவற்றை யாருக்கும் தெரியாமல் கீழே வீசியுள்ளார். அவருடன் அவரது தாய், தங்கையும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சென்றுள்ளனர். இவ்வாறு தமிழினி போலீஸôரிடம் வாக்குமூலம் அளித்ததாக ஆசியன் டிரிபியூன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பரந்தனில் உள்ள ஹிந்து கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்றவர் தமிழினி. கிளிநொச்சியில் உள்ள மத்தியக் கல்லூரியிலும் படித்துள்ளார். 1991-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தமிழினி, புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். ராணுவத்துக்கு எதிரான போரில் புலிகள் பெண் படை அரசியல் பிரிவின் தலைவர் நெஸ்மியா கொல்லப்பட்டதும் அந்த பதவிக்கு தமிழினி
3 thoughts on “விடுதலைப் புலிகள் பெண் படையின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழினி கைது”
Leave a Reply
You must be logged in to post a comment.
தமிழ் தேசியத்தலைவன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5 ஆவது கட்டப்போர் வெடிக்கும்
ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
அப்போது பேசிய திருமாவளவன், ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்றுவிட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக சிங்கள இனவெறியன் கோழை ராஜபக்ஸ அண்டப்புழுகினான். கடந்த ஜனவரி 2 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியை இராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப்போனேன்.
அன்று முதல் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம். தமிழக தலைவர்களை சந்தித்து பேசினேன். ஆனால் அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. ஜனவரி 15 ஆம் திகதி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினேன். இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்வதாக தலைவர்கள் கூறியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.
நான் உண்ணாவிரதம் இருந்ததை பார்த்து தமிழ் இன உணர்வால் பொங்கிய முத்துக்குமார் தீக்குளித்து உயிர் துறந்தார். இலங்கையில் இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டுகோளை ஒருபொருட்டாக நினைக்கவில்லை.
இலங்கைக்கு சீனா உதவுகிறது. நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் 4 ஆவது கட்ட போர் முடிந்து விட்டது. 5 ஆவது கட்ட போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும் என்றார்.
கனவு காணுங்கள்! நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ… அதுவாக நிகழும்!
என்ன அப்துல் கலாம் எண்ட நினைப்போ?
இராணுவக் கட்டமைப்பை வைத்திருந்தால் மட்டும் போதாது… மூளையைப் பாவிச்சு அரசியலும் நடத்தத் தெரியவேணும்!
பிரபகாரன் தப்பி இருக்கலாம்….
ஆனால்… ….ஐந்தாம் ஈழ போர் என்பது இப்போது சாத்தியமில்லை…..
மடையர்களே….. பிரபகாரன் தாக்குதல் நடதுவதுக்கு இது 1983 அல்ல… கொரிலா போர் இனி சாத்தியம் இல்லை…
எதோ தலைவர், தனிய போய் அடி படுகிற மாதிரி… தலைவர் தப்பினா காணும் இவர்களுக்கு….
சொர்ணம், பானு, தீபன்….. இன்னும் எத்தனை பேர் இப்ப இல்லை…….. இனி தலைவர் திரும்ப வந்து ஐந்தாம் கட்ட போர் தொடங்கி….. ஐயோ ஐயோ…..
ஆனால் அது தொடங்குதோ இல்லையோ..இங்க காசு கலக்சன் தொடங்கி விடும்…
தமிழ் நாட்டு அரசியல் கோமாளிகளின் பேச்சு விடிஞ்சா போச்சு…….
அவர்கள் தமது பண வருவாயை இழக்க விரும்புவார்களா? ஈழத்தில் பிரச்சனை இருந்தாதானே,,, புலம் பெயர் முட்டாள் தமிழரிடம் காசு கறக்கலாம்……………….
முப்படைகளையும் வைத்திருந்த புலிகள் , ஒன்றும் செய்யாமல்,,,, இனி தலைவர் தப்பி.. மீண்டு வந்து ஈழம் எடுப்பார் எண்டு நினைத்து இருக்கும் இந்த முட்டாள்களை என்ன சொல்வது….
சர்வதேச ஆதரவுடன்,,,,ஒரு தீர்வை எதிர்பார்ப்பதே யதார்த்தம்…….