எங்களால் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் -பாகிஸ்தான் இராணுவம் தெரிவிப்பு

Read Time:1 Minute, 46 Second

நாங்கள் உதவியதால் தான் இலங்கை இராணுவத்தினால் விடுதலைப் புலிகளை வெல்ல முடிந்தது என்று பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி வந்தது சமீபத்தில் போரில் விடுதலைப்புலிகளை முற்றுலுமாக அழித்துவிட்டதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்தனர் விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை தீவிர தாக்குதலில் ஈடுபடுவதற்கு பல்வேறு நாடுகள் ஆயுதமற்றும் ஆட்கள் உதவி செய்து வந்ததாக பேசப்பட்டது. மேலும் 2008ம் ஆண்டு மேமாதம் இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகா பாகிஸ்தான் சென்று அந்த நாட்டு தளபதி பர்வீஸ்கயானியை சந்தித்து பேசினார் அப்போது இலங்கை போருக்கு பல்வேறு உதவிகளை அவர்கேட்டார் அதன்படி ஏராளமான உதவிகளை பாகிஸ்தான் இராணுவம் செய்தது பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்கு அதகாரிகளையும் பாகிஸ்தானே அனுப்பி வைத்துள்ளது இந்த உதவிக்கு பிறகு தான் இலங்கை இராணுவம் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்ததாகவும் இந்த இராணுவ அதிகாரி கூறியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுத்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிக்கிறது -ஐரோப்பிய ஒன்றியம்
Next post விடுதலைப் புலிகள் பெண் படையின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழினி கைது