தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்ளவே பிரபாகரன் தனது பெற்றோரை வன்னிக்கு வரவழைத்தாராம் :சூசையின் மனைவி!
தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது பெற்றோரை இந்தியாவில் இருந்து, கடற்புலிகளின் தளபதி சூசையினால், முல்லைத் தீவுக்கு அழைத்த வந்ததாக சூசையின் மனைவி சத்தியவாணி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை தொடர்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பாதுகாப்பு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரனின் பெற்றோர் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி இலங்கைக்கு சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் வசித்து வந்த இவர்கள், கடற்புலிகளின் தளபதி சூசையினால், முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சூசையின் மனைவி சத்தியவாணி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். மிக விரைவில் தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படுவதால், அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரபாகரன் தனது பெற்றோரை வரவழைத்திருந்ததாக சூசையின் மனைவி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
4 thoughts on “தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்ளவே பிரபாகரன் தனது பெற்றோரை வன்னிக்கு வரவழைத்தாராம் :சூசையின் மனைவி!”
Leave a Reply
You must be logged in to post a comment.
are you witness for this event?
parapoonaku vimarasanam
\
பிரபா எப்பவும் முட்டாள்தனமாகத் தானே யோசிப்பான்… இதையும் செய்திருப்பான்! அறிவிலி!!
இருக்கலாம்….
2010 இல தலைவருக்கு சுக்கிர திசை… தமிழ் ஈழம் பிரகனப்படுத்துவார்,,,எண்டு தானே இங்க பெபரில போட்டினம்…..
தமிழா…. நீ ஒரு அடி முட்டாள் எண்டு உன் செயல் மூலம் உலகத்துக்கு காட்டுகிறாயே?