நலன்புரி நிலையங்களில் உள்ள முதியோர்கள் வெளியேற அனுமதி
Read Time:1 Minute, 19 Second
வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் பெயர் விபரங்களை முகாம்களுக்கு வெளியே பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் பி. எஸ். எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் முகாம்களுக்கு வெளியே இருக்கும் முதியவர்களின் உறவினர்கள் அவர்களை அழைத்து செல்வதற்கு இலகுவாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளியே உள்ள உறவினர்கள் தமது விண்ணப்பத்தை அரச செயலகத்தின் ஊடக சமர்ப்பித்து முதியவர்களை அழைத்து செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். நலன்புரி நிலையங்களில் உள்ள முதியவர்களை வெளியேற அனுமதிப்பது தொடர்பாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியயேற்ற அமைச்சும் வவுனியா அரச செயலகமும் கூடி ஆராய்ந்துள்ளன. இதனை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating