ஓஸ்லோ பேச்சுக்கான அரசாங்க குழு அறிவிப்பு

Read Time:1 Minute, 31 Second

norweflagnew.gifநோர்வே தலைநகர் ஓஸ்லோவில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசாங்கம் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தலைமையில் சிறிலங்கா அரசாங்கக் குழு ஓஸ்லோ பேச்சுக்களில் பங்கேற்க உள்ளது.

போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பாக ஓஸ்லோவில் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் நாட்களில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நோர்வே அனுசரணையாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஓஸ்லோ பேச்சுக்களில் பங்கேற்பது தொடர்பாக பரிசீலிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஓஸ்லோ பேச்சுக்களில் பங்கேற்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அ.தி.மு.க. தோல்வியால் பலியானவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்வு மேலும் 8 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் உதவி ஜெயலலிதா அறிவிப்பு
Next post வவுனியாவில் இரு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக் கொலை