வாஸ் குணவர்த்தனவின் மனைவி மற்றும் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Read Time:1 Minute, 34 Second

கைது செய்யப்பட்டிருக்கும் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகரான வாஸ் குணவர்த்தனவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரை எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாலபே உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவன் நிபுணாராய்ச்சி தாக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு கடுவெல நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாலபே உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவன் நிபுணாராய்ச்சி தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன பொலீஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் வாஸ் குணவர்த்தனவின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். அத்துடன் தாக்குதல் தொடர்பில் வாஸ் குணவர்த்தனவின் மகன் கைதுசெய்யப்பட்டதுடன், தேடப்பட்ட அவரது மனைவி பொலீசில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் உதவியாளராக செயற்பட்டு வந்த பெண் புலி அங்கத்தவர் கைது
Next post அரசாங்கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் -சஜித் பிரேமதாஸ