கடவுளுக்கு முன் செருப்புக் காலுடன் உட்கார்ந்த குஷ்பு மீதான வழக்கு ரத்து

Read Time:3 Minute, 44 Second

kushboo-3இந்துக் கடவளை அவமதிக்கும் வகையில் செருப்புக் காலுடன் உட்கார்ந்தது தொடர்பாக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. “வல்லமை தாராயோ” பட தொடக்க விழா கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு, முப்பெரும் தேவியரான லட்சுமி, சரசுவதி, துர்க்கை ஆகிய சாமி படங்களின் முன்பு காலில் செருப்பு அணிந்து உட்கார்ந்து இருந்தார்.

குஷ்புவின் இச்செயல் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே குஷ்பு மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான பழனி ஆயக்குடியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் பழனி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு குஷ்பு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி குஷ்பு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி ராஜஇளங்கோ விசாரித்தார். குஷ்பு சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடுகையில், இந்திய தண்டனை சட்டம் 295-ஐப் பொருத்தமட்டில் மத வழிபாட்டுச் சிலைகளை சேதப்படுத்துவது, இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே தண்டிக்க முடியும். நடிகை குஷ்புவைப் பொருத்தவரை படத்துக்காக அவர் நடித்துள்ளார். மற்றபடி இந்து சாமியை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்படவில்லை. இந்திய தண்டனை சட்டம் 295-ஏ பிரிவைப் பொருத்தஅளவில் மதத்தை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் இந்த சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடர மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். குஷ்பு மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடர மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எந்த அனுமதியும் பெறவில்லை. இந்திய தண்டனை சட்டம் 296-ஐப் பொருத்தவரை மத ரீதியான பொதுக்கூட்டங்களை கலைக்க முயலும் செயலில் ஈடுபடுபவர்களையே தண்டிக்க முடியும். குஷ்பு அதுபோன்ற செயலில் ஈடுபடவில்லை. இந்த விஷயங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் கீழ்கோர்ட் வழக்கை விசாரணைக்கு எடுத்து இருப்பது சரியல்ல. எனவே குஷ்பு மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து பழனி கோர்ட்டில் உள்ள வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலி முகவர்களைத் தேடி தாய்லாந்தில் வேட்டை, அப்பாவி தமிழ் அகதிகள் பாதிப்பு.. புலி முகவர்களான பிரபாவும், சங்கருமே பிரதான இலக்கு!
Next post இராணுவத்திடம் சரணடைந்துள்ள முன்னாள் புலியுறுப்பினர்களான சிறுவர் போராளிகளின் தீபாவளிக் கொண்டாட்டம்..