கேப் கொலராடா (வணங்கா மண்) கப்பலின் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை இன்று அரசாங்கத்திடம்..
கெப்டன் அலி கப்பலில் இருந்து இலங்கைக்கு கேப் கொலராடா கப்பலின்மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இன்று அரசாங்த்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 3மாத காலமாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடந்த இந்த பொருட்கள், இன்று அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு, வவுனியாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி 40அடி நீளம் கொண்ட 27 கொள்கலன்களை ஏற்றிய லொறிகளின் மூலம், 680 மெற்றிக்தொன் பெறுமதியான பொருட்கள் இன்று வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்வளவு காலம் துறைமுகத்தில் இந்த பொருட்கள் தேங்கியிருந்தமைக்காக, அரசாங்கம் 20 லட்சம் ரூபாவையும், இலங்கை செஞ்சிலுவை சங்கம் 6 லட்சம் ரூபாவையும் தாமதக் கட்டணங்களாக செலுத்தியுள்ளன. இதேவேளை இப்பொருட்கள் மெனிக்பாம் நலன்புரி முகாம் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating