வெடிப்பொருட்களுடன் 7பேர் பொலன்னறுவையில் கைது

Read Time:1 Minute, 27 Second

பொலன்னறுவை சோமாவதி பகுதியில் 14அடி தூக்குகயிறு மற்றும் ஜெலட்டினைட் ஆகியவற்றுடன் 7பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார். அந்த நபர்களிடம் இருந்து வெடிப்பொருட்கள் நீர்பம்பிகள் மற்றும் 36அடி நீளமான தண்ணீர் பாய்ச்சும் ஹோஸ்பைப் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. இந்த 7பேரடங்கிய குழுவானது பொலன்னறுவை சோமாவதி மகாவலி ஆற்றுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்ட மேற்குறித்த பொருட்களை தோண்டி எடுத்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர திருகோணமலை சீனன்குடா பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றையும் தமது காவலில் உள்ள புலி உறுப்பினர் கொடுத்த தகவலையடுத்து கைப்பற்றியதாகவும் பொலிஸ் தரப்பு மேலும் தெரிவிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “வெடிப்பொருட்களுடன் 7பேர் பொலன்னறுவையில் கைது

  1. ஆண்டபரம்பரை மீண்டும் ஒருமுறை ஆழநினைப்பதில் என்ன குறை என்று எண்ணி சிதம்பரத்தை சேர்ந்த திருவேங்கடத்தின் பேரன் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஆளவிட்டு முப்பதுவருடமாக நாம் கண்டதென்ன?? பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை வைத்துக் கொண்டு எதுவும் புரியாமல் புளிய மரத்தில் ஏறி வெள்ளி பார்த்தது தான் வேறென்ன?
    .வெங்கினாந்திகள் நாங்கள் புலிக்கு காசு அள்ளி கொடுத்தால் ஈழம் வருமென புளுகில் இருந்தோம்
    புலிகளின் வெங்காயதலைகளோ கில்லரிக்கு நம்ம காசை குடுத்து வைகோவுக்கும் திருமாவுக்கும் நம்ம காசை கொடுத்து நம்ம பிள்ளைகளை பலி கொடுத்து பிணக்கணக்கு காட்டி தாங்கள் மட்டும் சொகுசாக இருந்து கொண்டு ஈழம் வருமென முள்ளிவாய்காலில் வெள்ளி பார்த்தனர்.
    சாகப்பிறந்ததுகள் ஆளப்புறப்பட்டு வாழப் பிறந்ததுகளை பல்லாயிரக்ககணக்கில் பலி கொடுத்து தாங்களும் கொள்ளி வைக்கவே ஆள் இல்லாமல் இருந்த இடமே தெரியாமல் ஆளப்பிறந்ததுகள் என்று சொல்லி அழிந்து போனதுதான் இன்று மிச்சம்.

Leave a Reply

Previous post அன்று பிரபாகரன் புகழ்பாடிய “கருணா” இன்று மஹிந்த புகழ் பாடுகின்றார் (Part-2)
Next post சண்டேலீடர் இரு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்