ஜோதிடர் முன்னிலையிலேயே முத்துஹெட்டிகம சத்தியப் பிரமாணம்
தென்மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நிஷாந்த முத்துஹெட்டிகம ஜோதிடர் ஒருவரின் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தென்மாகாண சபைக்கு தெரிவான உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட போதிலும் முத்துஹெட்டிகம அதில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் காலியில் வைத்தே ஜோதிடர் சுமணதாஸ அபேகுணவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார். தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது அவர் நடந்துக் கொண்ட விதம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் தென்மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள போதிலும் சபையில் அவர் சுயமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இவர் நாட்டைவிட்டு வெளியேறுவதாகவும் தாம் அரசியலைவிட்டு ஒதுங்கப் போவதாகவும் தற்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.
Average Rating