தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர்
தம்மை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பினால் தாம் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 78 இலங்கை அகதிகள் ஒசானிக் வைக்கிங் என்ற கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தோனேசியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் அவர்கள் இன்றையதினம் இவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பேட்டியொன்றை எடுத்துள்ளது. அந்த பேட்டியின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். தாம் ஏற்கனவே பலகாலம் இந்தோனேசியாவில் இருந்ததாக குறிப்பிடும் அகதிகள் அங்கு திருப்பிச் செல்வதைவிட உயிரை மாய்ப்பதே மேல் எனத் தெரிவித்துள்ளனர். 9மாதக் குழந்தை ஒன்றும் இக்கப்பலில் இருப்பதால் அக்குழந்தைக்கு போதியளவு பால்மா கூட இல்லை என அவர்கள் தெரிவித்தனர். அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த இலங்கை அகதிகளை ஏற்க மறுத்துள்ள நிலையில் இவர்களை அவுஸ்திரேலிய தொலைக்காட்சியும் வானொலிகளும் பேட்டி கண்டு இவர்கள் நிலையை எடுத்துரைத்து வருகின்றமை குறிப்பிடதக்கது. மொத்தமாக 5பெண்கள் 5சிறுவர்களும் இக்கப்பலில் மாதக்கணக்கில் தற்போது தங்கியுள்ளனர். இந்தோனேசியா இவர்களை தனது நாட்டிற்குள் எடுக்கவிருப்பம் தெரிவித்துள்ள போதும் அங்கு அடிக்கடி ஏற்படும் எரிமலைவெடிப்பு நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற உபாதைகள் நிறைந்த நாடாகவே இது இன்னமும் உள்ளது இங்கு சென்ற வாழ்க்கை நடத்துவது தற்கொலைக்கே சமன் என்பதை யாவரும் அறிவர் விரைவில் ஒரு நல்லமுடிவை எடுக்க அவுஸ்திரேலிய அரசை சர்வதேச சமூகம் வற்புறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Average Rating