இந்திய முறையிலான ஒரு தீர்வை முன்வைப்பதற்கு வலியுறுத்தவேண்டும் -வீ, ஆனந்தசங்கரி தமிழக முதல்வருக்கு கடிதம்

Read Time:3 Minute, 47 Second

இலங்கைப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறையிலான எந்தவொரு அரசியல் தீர்வு வழங்கப்பட்டாலும் கடும்போக்காளர்கள் எதிர்காலத்தில் அநாவசியமாகத் தலையிடும் வாய்ப்பை அது கொடுத்துவிடும். எனவே இங்கும் இந்திய முறையிலான ஒரு தீர்வை முன்வைப்பதற்கு வலியுறுத்தவேண்டும். அத்தகைய முறை ஒற்றையாட்சி சமஷ்டிஆகிய வார்த்தைகளை விரும்பாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். என்று தமிழகமுதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாகவும் இலங்கைத் தமிழர்களின் இன்றையநிலை குறித்தும் ஆனந்தசங்கரி கருணாநிதிக்கு நீண்ட கடிதமொன்றை எழுதியுள்ளார். நாடும் நாட்டு மக்களும் அதிகளவில் கஷ்டங்களுக்கு உள்ளாகி பலவற்றை இழந்துள்ளமையால் இந்நாட்டிலோ அல்லது வேறு எங்கேயோ யார் இருந்தாலும் இவ்வாறு மீண்டும் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது, ஏற்படவிடவும் கூடாது. ஒற்றையாட்சியின்கீழ் எத்தகைய தீர்வு வழங்கப்பட்டாலும் கடும் போக்காளர்கள் எதிர்காலத்தில் அநாவசியமாக இதில் தலையிடும் வாய்ப்பைக் கொடுக்கும். ஆகவேதான் இந்திய முறையிலான ஒரு தீர்வை முன்வைக்குமாறு நான் வற்புறுத்தி வருகின்றேன். இந்தியர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறந்ததொரு கோட்பாட்டுக்கு அமைய அவர்களின் அரசமைப்பை உருவாக்கியுள்ளமையால் அந்த மாதிரியான அமைப்புமுறை ஒற்றையாட்சி, சமஷ்டி ஆகிய வார்த்தைகளை விரும்பாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். ஆகவே ஐயா, சகல அரசியல் வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் மறந்து தமிழ் நாட்டவர் அனைவரையும் ஒன்றிணைத்து அரசியல்தீர்வு காண்பதில் தங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். எங்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மைக் கட்சிகளைச் சேர்ந்த நாம் ஒரு பொது வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எனது வேண்டுகோளைத் தாங்கள் ஏற்று இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மத்திய அரசை இலங்கை சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதாகவுள்ள எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டுமென மிக விநயமாகக் கேட்டுக்கொள்கிறேன். தங்களைச் சந்தித்து இது சம்பந்தமாக மேலும் சில கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பை விரைவில் ஏற்படுத்தித் தருவீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “இந்திய முறையிலான ஒரு தீர்வை முன்வைப்பதற்கு வலியுறுத்தவேண்டும் -வீ, ஆனந்தசங்கரி தமிழக முதல்வருக்கு கடிதம்

 1. Tamils around the world no longer trust the State of Tamil Nadu, as the politicians do not really have the hearts and minds to stand up giving voice when the Tamils anywhere face hardships, and whenever their values are at the mercy of the majority community. The Tamil Nadu State has no power to stand up to save their brethrens, even when the Tamils die in the other States of India. Tamil Nadu politicians did nothing to save the Tamils in Eelam, even though these politicians are influential and help the government to stay in power in New Delhi.

  Karunanidhi has married three times. His wives are Mrs. Padmavathy, Mrs. Dayalu Ammal, and Mrs. Rajathiammal. His sons are M.K Muthu, who was born to Padmavathy and passed away. M.K. Azhagiri, M.K. Stalin, M.K Tamilarasu, and his daughters are Selvi and Kanimozhi, who were born to Dayalu Ammal. Kanimozhi is the only daughter from his third wife, Rajathiammal. Karunanidhi is fostering his children slowly in politics, and they secure high profile posts immediately after they are introduced into politics, because Karunanidhi is giving prominence to his children rather than working for the betterment of the Tamil society. Karunanidhi, during most of his political career, at the expense of the ignorance and poverty of the Tamil Nadu people, and through corruption, built up his own empire of a near-dynasty of enormous wealth and nepotism.
  Indian law even though the Indian Constitution does not allow any person to have multiple partners without getting ‘divorce’.

  I can only say GOOD LUCK, Sangari !!!, Karuna can’t even clean up his own backyard and do you think he has time to answer your Love Letter.

 2. சந்திரிகா ஜனாதிபதியானதும் நாடு ஒரு பள்ளிக்கூடம் போகிற சிறுமியால் நிர்வகிக்கப்படுவதாக சந்திரிகாவின் அனுபவமின்மையை ஜேஆர் ஏளனம் செய்தார். சந்திரிகாவோ ஒரு “பகூபூத” அரசியலமைப்பு சட்டத்தை ஜேஆர் உருவாக்கி நாட்டை பாழாக்கி விட்டார் என்று குறைகூறினார்.
  கத்தியால் மனிதர்களுக்கு பிரயோசனமாகவும் நிறைய செய்யலாம். மனிதர்களை பிணமும் ஆக்கலாம். கத்தியை பாவிப்பவனின் நோக்கத்தில் தான் அது தங்கியுள்ளதே தவிர கத்தியில் அல்ல. அந்த கத்தியை போலத்தான் இலங்கை அரசியல் அமைப்பு சட்டமும். ஜேஆர் தான் கொண்டுவந்த அரசியலமைப்பு மூலம் என்னவெல்லாம் செய்யலாம் எனக் கனவு கண்டாரோ அதையே மஹிந்த ஜனாதிபதியானதும் நடைமுறையில் செய்து காட்டுகிறார். ஜேஆர் கொண்டுவந்த அரசிலமைப்பையே வைத்து இன்று மஹிந்த யூஎன்பீயை தேர்தல்கள் மூலம் மக்களிடமிருந்து ஓரம்கட்டி வருகிறார்.
  ஜனநாயக நாடுகளில் உள்ள எதிர்கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் என்றால் வெகு சந்தோசம். ஆனால் இலங்கையில் மட்டும்தான் மகிந்தவின் ஆட்சியில் தேர்தல் என்றால் எதிர்க் கட்சிகளுக்கு குலை நடுக்கம்.
  இலங்கையின் அரசியல் வரலாற்றை பின்னோக்கி பார்பவர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்.
  கொழும்பை சேர்ந்த சில மிகப்பணக்கார குடும்பங்கள் அரசியலில் கொழும்பை சேர்ந்த ஆங்கிலம் பேசும் இடதுசாரிகளின் ஆதரவோடு கிராமப்புற மக்களின் வாழ்க்கையையோ அடிப்படை ஜனநாயகத்திலேயோ எள்ளளவும் அக்கறை இல்லாத உயர்மட்ட அரசஅதிகாரிகளின் ஆதரவோடு பாராளுமன்றத்தை பாவித்து இலங்கை சுதந்திரம் அடைந்த போது இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் சட்டங்களை ஒவ்வொன்றாக நீக்கினர் டொனமூர், சோல்பரி ஆணைக் குழுக்கள் கூட கிராமப்புற மக்களும் சிறுபான்மை மக்களும் ஒதுக்கப்பட்டால் இலங்கையில் மோசமான நிகழ்வுகள் நடைபெறுவது தடுக்க முடியாது என்று அன்றே ஆரூடம் சொல்லியிருந்ததை நாம் மறக்க முடியாது.
  இலங்கை சுதந்திரம் அடைந்த போது இலங்கையில் இரண்டு விதமான இலங்கையர் இருந்தனர்.
  (1)கொழும்பை சேர்ந்த ஆங்கிலம் பேசும் மேற்கு நாட்டு கலாச்சாரத்தை விரும்பும் மேற்கு நாட்டவருக்கு வால் பிடிக்கும் இலங்கையர்.
  (2)கிராமப் புறத்தில் வாழ்ந்த தமிழ் சிங்கள் முஸ்லீம் இலங்கையர்.
  ஜேவீபியினரின் 1971 முதலாவது கிளர்ச்சியில் இருந்து இந்த அரசியல் அதிகாரம் குவிந்திருந்த குடும்பங்கள் எதையும் கற்று கொள்ளவில்லை.
  இலங்கை சுதந்திரம் அடைந்த போது இருந்த அரசியல்யாப்பில் இலங்கையர் அனைவரும் சந்தோஷமாக வாழவும் பொருளாதார ரீதியில் முன்னேறவும் எதுவாக அனைத்து சட்டமுறைகளும் உரிமைகளும் இருந்தன. அரசியல்யாப்பில் 29(2) சரத்து பாராளுமன்றம் மக்களின் சுதந்திரங்களை பறிக்க முடியாதவாறு இருந்தது..1947 இந்தியாவும் 1971 மலேசியாவும் கொண்டு வந்த இதையொத்த சட்டங்கள் மூலம்தான் இன்றுவரை பின்தங்கிய கிராமப்புற மக்களை ஓரளவேனும் பாதுகாக்க கூடியதாக இருந்துவருகிறது.
  இலங்கை சுதந்திரம் அடைந்த முதல் இந்த சட்டங்கள் ஓவ்வொன்றாக மாற்றப்பட்டு வந்தன. சிறிமாவோ கொண்டு வந்த இலங்கை குடியரசுக்கான அரசியல்யாப்பில் நிறைய தவறுகள் இருந்தன. ஜேஆர் கொண்டுவந்த அரசியல்யாப்பு மிகவும் மோசமானது. பிரதேச ரீதியான ஜனநாய உரிமைகளும் அதிகார பகிர்வுகளும் ஜேஆர்இனால் இல்லாமல் ஒழிக்கப்பட்டன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற பதவி நாட்டை ஆழ உருவாக்கப்பட்டது
  தங்கள் பதவிகளையும் தங்கள சார்ந்தவர்களின் நலனையும் காப்பாற்ற எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் பிறகு அவர்களுக்கெதிராகவே வருமென ஆட்சியில் அதிகார மாயையில் இருப்பவர்களுக்கு புரிவதில்லை.
  ஜேஆர், சிறிமாவோ, லலித், காமினி, அனுரா, பிரேமதாசா, சந்திரிகா, ரணில் போன்ற கொழும்பு வாழ்வில் ஊறிய அரசியல் தலைமைகளுக்கு தென்இலங்கையிலிருந்து கிராமத்துகாரன் ஜனாதிபதியாக வரலாம் வந்தால் என்னவெல்லாம் செய்வான் என்று என்றுமே எண்ணியது கிடையாது.
  ஆட்சிக்கு வந்த மஹிந்த இதே ஜே ஆரின் அரசியல் அமைப்பு சட்டங்களை பயன்படுத்தி யூஎன்பீ, ஜேவீபீ போன்றவற்றை தேர்தல்கள் மூலம் ஓரங்கட்டியதோடு முப்பதுவருடமாக புரையோடிப் போயிருந்த பயங்கரவாதம் என்ற “பிச்சைக்காரன் புண்ணை”யும் சுகப்படுத்தி உள்ளார். .
  யூஎன்பீ ஜேஆர் கொண்டு வந்த அரசியல்யாப்பை இத்தனை வருடமும் எதிர்க்காத ஜேவீபீயினரும் யூஎன்பியினரும் இன்று எதிர்க்க முயல்வது அவர்களின் அரசியல் வங்குரோத்துதனத்தை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
  வரப்போகும் தேர்தலில் தங்கள் பதவிக்காகவும் நலனுக்காகவும் நாட்டை சீரழித்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
  .

Leave a Reply

Previous post பருப்புமாவுடன் லொறி பிடிப்பட்டது… இடம்பெயர்ந்தவர்களுக்கான உணவுப்பொருள் என தெரிய வந்துள்ளது!
Next post அவுஸ்திரேலிய கப்பலிலுள்ள இலங்கை அகதிகளுக்கும் இந்தோனேஷிய அதிகாரிகளுக்குமிடையேயான நெருக்கடி தொடர்கிறது