கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை மலேஷிய காவல்துறையினர் மீட்பு
கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை மலேஷிய காவல்துறையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு இலங்கையர்களை கடத்திய நபர்களே முன்னர் 16 வயது இலங்கை இளைஞர் ஒருவனையும் கடத்திச் சென்று கப்பம் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மலேஷியாவின் சீட்டாபார்க்கில் உள்ள தொடர்மாடிக் கட்டிடமொன்றில் கடத்தப்பட்டவர்களை தடுத்து வைத்திருந்ததாகத் தெரியவருகிறது. 57 மற்றும் 63 வயதான இரண்டு இலங்கையர்களையே கடத்தல்கள் காரர்கள் இவ்வாறு தடுத்து வைத்திருந்ததாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கடத்திச் செல்லப்பட்டவர்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும் பல்வேறு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் உள்ளிட்ட ஆறு பேரை மலேஷிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட நபர்களிடமும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating