அமிதாப்பச்சன் மனைவி டெல்லி மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வு

Read Time:1 Minute, 54 Second

Amithap.jpgஅமிதாப்பச்சன் மனைவி பச்சன் ஜெயா அமிதாப் ஆதாயம் தரும் இரட்டை பதவி பிரச்சினை காரணமாக தனது டெல்லி மேல்-சபை எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச மாநில சட்டசபையில் இருந்து 2 பேர் டெல்லி மேல்-சபைக்கு தேர்ந்து எடுக்கப்பட வேண்டி இருந்தது. காங்கிரஸ் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆகவே சமாஜ் வாடி கட்சி சார்பில் பச்சன் ஜெயா அமிதாப், அமிர் ஆலம் கான் ஆகிய 2 பேர் இந்த பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். அவர்கள் 2 பேர் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்ய வில்லை. ஆகவே அவர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படுவது உறுதி ஆகி விட்ட து. இன்று மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 8-ந் தேதி பகல் 3 மணிக்கு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நேரம் ஆகும். அதற்கு பின்னர் பச்சன் ஜெயா அமிதாப், அமிர் ஆலம் கான் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்ட தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பச்சன் ஜெயா அமிதாப் 2-வது முறையாக மேல்-சபை எம்.பி.ஆகிறார். அமிர் ஆலம் கான் ஏற்கனவே 2 முறை பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். இப்போது முதல் முறையாக மேல்சபை எம்.பி.ஆகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீனாவில் புயல் மழைக்கு 29 பேர் பலி
Next post வாழைச்சேனையில் இரு புலிகள் சுட்டுக்கொலை