பாக்தாத், பழப்பெட்டியில் 8 மனிதத் தலைகள்!
Read Time:1 Minute, 4 Second
இராக் தலைநகர் பாக்தாத் அருகே, பழம் எடுத்துச்செல்ல பயன்படும் அட்டைப் பெட்டியில் 8 மனிதத் தலைகள் இருப்பது தெரியவந்தது. பாக்தாதின் வடகிழக்கே உள்ள பகுவா நகருக்கு வெளியே நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த பெட்டி இருப்பதை அறிந்த போலீஸôர் அதை சோதனையிட்டனர். அதில் 8 மனித தலைகள் இருந்தன. இவை கருப்பு பிளாஸ்டிக் பைக்குள் வைக்கப்பட்டிருந்தன.
சில தலைகள் கண்கட்டப்பட்ட நிலையிலும் அழுகிய நிலையிலும் இருந்தன. எனவே சில தினங்களுக்கு முன் இவர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸôர் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, பாக்காதில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.