கருணா குழு வன்முறைகள் யுத்த நிறுத்த மீறல்கள் அல்ல: கண்காணிப்புக் குழு

Read Time:1 Minute, 18 Second

karuna2.gif கருணா குழுவினரது வன்முறைகள் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் அல்ல என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலென் ஓல்ப்ஸ் டொடிட்டர் கூறியுள்ளதாவது: துணை இராணுவக் குழு அமைப்பினர் மீதான ஐரோப்பியத் தடை விவகாரத்தில் நாம் தலையிட மாட்டோம். அது கண்காணிப்புக் குழுவினரின் செயற்பாடுகளுக்கு மேலானது.

கருணா குழுவினர் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தாலும் அவர்களது வன்முறைகளை யுத்த நிறுத்த மீறல்களாக நாம் கணக்கில் கொள்ள முடியாது. பேச்சு மேசையில் அவர்கள் ஒரு தரப்பினர் அல்ல.நாம் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளிடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் பணியையே மேற்கொள்வோம் என்றார் அவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பயங்கரவாதத்தை முறியடிக்க சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்போம்: இங்கிலாந்து தூதுவர்
Next post பாக்தாத், பழப்பெட்டியில் 8 மனிதத் தலைகள்!