இலங்கை அரசிற்கு சார்பான “ஏசியன் ரிபியூன்’ இணைய ஆசிரியர் குற்றவாளி என சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு

Read Time:5 Minute, 27 Second

ஈழத் தமிழரும் நோர்வே வாசியும் சுயாதீன ஊடகவியலாளருமான நடராஜா சேதுரூபன் என்பவர் மீது தொடர்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்டுரைகளை வெளியிட்டு வந்ததாக குற்றஞ்சுமத்தி தொடரப்பட்ட வழக்கில், “ஏசியன் ரிபியூன்’ ஆசிரியர் கே.ரி.இராஜசிங்கத்தை சுவீடன் மாவட்ட நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இக்கட்டுரைகள் மற்றும் செய்திகளால் சேதுரூபனுக்கு ஏற்பட்ட இழப்பிற்காக உடனடியாக ஒரு இலட்சத்து 25 ஆயிரம் சுவீடன் நாட்டு குரோணர் பணத்தை வட்டியுடன் செலுத்தும்படியும் நீதிமன்றின் இத் தீர்ப்பை மேற்படி “ஏசியன் ரிபியூன்’ இணையத்தளத்திலும், இலங்கையில் ஒரு பத்திரிகையின் முன்பக்கத்திலும் துலாம்பரமாக பிரசுரிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இந்த அவதூறு ஏற்படுத்தும் கட்டுரைகள் மற்றும் செய்திகளால் சேதுரூபனுக்கு ஏற்பட்ட மானநஷ்டத்திற்கான இழப்பீடு தொடர்பல் இனி நீதிமன்றம் கணக்கிட்டு முடிவு செய்யும் தொகையை மானநஷ்டத் தொகையாக வழக்காளிக்கு செலுத்தும்படியும் நீதிமன்றம் தனது 23பக்கத் தீர்ப்பில் உத்தரவு வழங்கியுள்ளது.

சுவீடன் தலைநகரம் ஸ்ரொக்கொம்மில் உள்ள நொட்டாலி மாவட்ட நீதிமன்றில் மூண்று நீதிபதிகளைக் கொண்ட ஆயம் இந்தத் தீர்ப்பை கடந்த புதனன்று பிற்பகல் வழங்கியது. தம்மைப் புலி உறுப்பனர் என்றும், தாம் புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுக்காகப் பணிபுரிபவர் என்றும், தெரிவித்து உண்மைக்குப் புறம்பான அவதூறுத் தகவல்களை கே.ரி.இராஜசிங்கம் தமது “ஏசியன் ரிபியூன்’ இணையத்தளம் ஊடாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார் என்றும் இக்கட்டுரைகள் மற்றும் தகவல்களை இலங்கையில் சில அரச சார்பு ஊடகங்களும் மேற்குலகில் இலங்கைத் தரப்பிற்குச் சார்பாகச் செயற்படும் சில ஊடகங்களும் மறு பிரசுரம் செய்து பிரசாரப்படுத்தி வந்தன என்றும் இதில் தமது உயிருக்கு பேராபத்தும், தமது பெயருக்கு அபகீர்த்தியும் ஏற்பட்டு வந்துள்ளன என்றும், சேதுரூபன் தனது வழக்கில் சுட்டிக்காட்டி இருந்தார்.

கே.ரி.இராஜசிங்கமும் அவரது “ஏசியன் ரிபியூன்’ இணையத்தளத்தை நடத்துவதாக கூறப்படும் ஆசிய கற்கைகளுக்கான உலக நிறுவனமும் சுவீடனை மையமாகக் கொண்டு இயங்குவதால் அங்கு இந்த வழக்குத் தொடரப்பட்டது.

வழக்காளியான சேதுரூபன் சார்பல் இலங்கையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பனர்களின் விசேட பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி பின் தற்போது சூடானில் ஜ.நா அதிகாரியாக சேவையாற்றிவரும் அதிகாரி ஒருவர் சுவீடன் நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்காளியான சேதுரூபனை பற்றியவை எனக்கூறப்படும் செய்திகளை இலங்கையின் தேசிய உளவுப் பிரிவினர் தம்மிடம் அவ்வப்போது வழங்கி அவற்றை பிரசுரிக்கும்படி கேட்டுக்கொண்டமையால் தாம் அவற்றை வெளியிட்டு வந்தார் என்பதை கே.ரி.இராஜசிங்கம் நீதிமன்ற விசாரணையில் ஒப்புக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.

இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு கே.ரி.இராஜசிங்கத்திற்கு மூன்று வாரகால அவகாசம் வழங்கப்பட்டள்ளது. அதன்பின்னர் இத்தீர்ப்பு நடைமுறைக்கு வரும். தீர்ப்பு நடைமுறைக்கு வந்து இரண்டு வார காலத்திற்குள் இத்தீர்ப்பின் முழு ஆங்கில மொழியாக்கத்தை “ஏசியன் ரிபியூன்’ இணையத்தளத்தின் முன்பக்க இணைப்பாக பிரசுரிக்க வேண்டும் என்றும் மூன்று வாரத்திற்குள் இலங்கையில் ஒரு பத்திரிகையில் முற்பக்கத்தில் தீர்ப்பின் முக்கிய பகுதிகளை பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் பணித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி உபமின் நிலையத்தின் புனரமைப்புப் பணி
Next post உருத்திரகுமாருக்கு எதிராகச் சதியா? யார் அந்தச் சதிகாரர்கள்?? (Part-1)