இன்று திமுகவில் இணைகிறார் குஷ்பு

Read Time:1 Minute, 55 Second

காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைகிறார். கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக தங்கபாலு, இளங்கோவன், சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்க கருத்து கூறியிருந்தனர்.

ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்துள்ளார் குஷ்பு. இன்று மாலையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைகிறார்.

முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்து அமைச்சரவையில் முஸ்லீம் பெண் அமைச்சர்
Next post காதலாகி படத்தில் முத்தக் காட்சி சென்ஸார் எதிர்ப்பு..!