காதலாகி படத்தில் முத்தக் காட்சி சென்ஸார் எதிர்ப்பு..!

Read Time:1 Minute, 39 Second

கே கிரியேஷன் சார்பில் கே.ஆர்.விஷ்வா இயக்கி, தயாரிக்கும் படம் ‘காதலாகி’. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு நிமிட முத்தக் காட்சியை குறைக்க தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் விஷ்வா கூறியதாவது: இது இன்றைய இளைஞர்களின் காதல் கதை. கிருஷ்ணகுமார்& சிருஷ்டி, அஜய்&அம்ரிதா, ரோஷன்&நட்சத்திரா என்ற 3 புதுமுக ஜோடிகள் நடிக்கிறார்கள். இதில் கிருஷ்ணகுமார், சிருஷ்டியை காதலிப்பதால் அது பிடிக்காமல் அவரின் பெற்றோர் இறந்து விடுகிறார்கள். இதனை அவர் காதலியிடம் மறைத்து விடுகிறார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இதைத் தெரிந்து கொள்ளும் சிருஷ்டிக்கு காதலன் மேல் ஏற்படும் அனுதாபத்தை முத்தமாக வெளிப்படுத்துகிறார். இதற்காக ஆங்கில முத்தக் காட்சி படமாக்கப்பட்டது. இது ஒரு நிமிடம் படத்தில் இடம்பெற்றது. படம் பார்த்த தணிக்கை குழுவினர், இந்த காட்சியின் நீளம் அதிகம். அதை பாதியாக குறைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதை ஏற்று முத்தக்காட்சியை 30 விநாடிகளாக குறைத்து விட்டோம். படம் மே 21ம் தேதி வெளிவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று திமுகவில் இணைகிறார் குஷ்பு
Next post ஆதரவற்ற குழந்தைகளுக்கு நமீதா பிறந்த நாள் விருந்து!