மற்றொரு சிறுவனைக் காணவில்லை!!!!
களனி ரஜமகா விகாரையில் காணாமல் போன குழந்தை மீண்டும் பெற்றோரிடம் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியின் மத்தியில், மற்றொரு சிறு பிள்ளை காணமல்போன கவலையான செய்தியொன்று கிடைத்துள்ளது. வத்தளை பள்ளியவத்தைப் பகுதியைச் சேர்ந்த சித்தும் சத்சர எனும் ஒன்றரை வயதான ஆண் பிள்ளையே இவ்வாறு காணாமல் போயுள்ளது. குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான இந்தச் சிறுவன் கடந்த 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனது பாட்டியுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளான்.
சிறுவனின் வீடு களனி ஆறு கடலில் கலக்கும் கழிமுகத்திற்கு அருகிலிருப்பதால் கடற்படையினரின் உதவியுடன் இச்சிறுவனைத் தேடியுள்ளனர்.
தேனீர் தயாரித்து விட்டு பிள்ளையைத் தேடியபோது அவனைக் காணவில்லையென சிறுவனின் பாட்டி தெரிவித்தார். பிள்ளையை எல்லா இடத்திலும் தேடிப்பார்த்தும் பிள்ளை கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கும் அவனின் தாயார் இச்சிறுவன் இருதய நோயால் பாதிக்கப் படுவதாகவும் சொன்னார்.
இதனால் மாதத்திற்கு ஒருமுறை வைத்தியரிடம் மருந்து எடுத்துக் கொடுக்கவேண்டியுள்ளதாகவும் சிறுவனின் தாயார் கூறினார்.
இது தொடர்பாகப் பொலிசாரிடம் கேட்டபோது, பிள்ளை கடத்தப்பட்டதா அல்லது களனி ஆற்றில் தவறி விழுந்ததா என்பதுபற்றி விசாரணை செய்து வருவதாகக் குறிப்பிட்டனர்.
இச்சிறுவனைப்பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் 0728108625 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தகவல் தருமாறு பெற்றோர் கேட்டுள்ளனர்.
Average Rating