ஆதரவற்ற குழந்தைகளுக்கு நமீதா பிறந்த நாள் விருந்து!
மே 10ம் தேதி நமீதாவுக்கு பிறந்த நாள். வழக்கமாக ஷூட்டிங் ஸ்பாட்களில் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவார் நமீதா. ஆனால் இந்த முறை பிறந்தநாளன்று படப்பிடிப்பு எதுவுமில்லாததால் சொந்த ஊரான சூரத்துக்கே போய் பெற்றோருடன் பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால் அடுத்த நாளே சென்னையில் மானாட மயிலாட படப்பிடிப்புக்கு வந்த நமீதா, அங்கும் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அனைவருக்கும் தன் கையால் கேக் ஊட்டினார். நமீதாவுக்கு தமிழகத்தில் ஏற்கனவே ரசிகர் மன்றம் துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் ரசிகர் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள்கள், கம்ப்யூட்டர்கள், திருமண உதவி என பல நற்பணிகளைச் செய்து வருகிறார் நமீதா. இந்த ஆண்டும் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்து. நமீதா இதில் பங்கேற்று குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். மாணவ மாணவிகளுக்கு உதவிகளும் வழங்குகிறார்.
Average Rating