சர்கோஸியால் எனது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு- கார்லா ப்ரூனி புலம்பல்

Read Time:3 Minute, 59 Second

பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை மணந்து கொண்டது முதல் எனது செக்ஸ் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது உடல் தேவையை போக்காமல் தனது பணியிலேயே பிசியாக இருக்கிறார் சர்கோஸி என புலம்பியுள்ளார் கார்லா. இத்தாலியைச் சேர்ந்த மாடல் தான் கார்லா. பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை தீவிரமாக் காதலித்து கரம் பிடித்தவர். இவர்களது காதல் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இன்றும் கூட இந்த பரபரப்பு சற்றும் குறையாமல் விறுவிறுப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது. இடையில் புதுக் காதலரை பிடித்து விட்டார் கார்லா என செய்திகள் வெளியாகின. இருப்பினும் இது புஸ்வாணமாகி விட்டது. சமீபத்தில் வெளியான ஒரு நூலில், கார்லா கூறியதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியிருந்தது.

அமெரிக்காவுக்கு சர்கோஸியுடன், கார்லா விசிட் அடித்தபோது, கார்லாவும், ஒபாமாவின் மனைவி மிஷலும் சந்தித்துப் பேசினர்.

அப்போது மிஷலிடம் கார்லா கூறுகையில், ஒருமுறை காலையில் நானும், சர்கோஸியும் படுக்கையில் பிசியாக இருந்தோம். அப்போது ஒரு வெளிநாட்டு அதிபர் சர்கோஸியைப் பார்க்க வந்திருந்தார்.

இருப்பினும் எங்களால் படுக்கை அறையிலிருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் அந்த அதிபரை காக்க வைக்க நேரிட்டது. உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்துள்ளதா என்று கேட்டு மிஷலை நடுங்க வைத்தார் கார்லா.

கார்லாவின் கேள்வியைக் கேட்டு சற்று ஆடிப் போன மிஷல், பின்னர் சுதாரித்து சிரித்தபடி அப்படியெல்லாம் எனக்கு நேர்ந்ததில்லை என்று கூறி நழுவினார்.

இந் நிலையில் சர்கோஸியை மணந்தது முதல் செக்ஸ் தேவை பூர்த்தியாகாமல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் கார்லா. இதுவும் ஒரு நூலில்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 வயதாகும் கார்லா, இதுகுறித்து ஜோனாதன் ஆல்டர் என்பவர் எழுதியுள்ள நூலில் கூறுகையில், எனது கணவர் சர்கோஸி தனது பணியில்தான் தீவிரமாக உள்ளார். இதனால் எனது உடல் தேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

எனக்கு விருப்பமான வரை செக்ஸில் ஈடுபடுவதை அவரது வேலைப்பளு தடுக்கிறது. இதனால் எனது செக்ஸ் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளன என்று கூறியுள்ளார் கார்லா.

கார்லா செக்ஸ் மீது அதிக மோகம் கொண்டவர். ஒரு ஆணுடன் மட்டும் உறவு கொள்வது மிகவும் போரடிக்கும் விஷயம் என்று முன்பு ஒரு முறை கூறியிருந்தார்.

கடந்த காலங்களில் இங்கிலாந்து ராக் நட்சத்திரங்களான மைக் ஜேகர், எரிக் கிளாப்டன், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் லாரன்ட் பேபியஸ் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்தான் கார்லா என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாண மாநகர சபை மேயரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு
Next post உருத்திரகுமாருக்கு எதிராகச் சதிசெய்பவர்கள் யார்?? (பாகம் -2)